திடீர் அறிவிப்பு! அரசியலில் இருந்து விலகினார் திருப்பூர் துரைசாமி

 
ட்

 மதிமுகவில் வைகோவின் மகன் தலைமை துரை வைகோ பொறுப்புக்கு வந்தது முதல் கட்சியில் மூத்த நிர்வாகிகள் பலரும் அதிருப்தி அடைந்தனர். வாரிசு அரசியல் வேண்டாம் என்று எதிர்த்து திமுகவில் இருந்து வெளியேறி தனிக்கட்சி ஆரம்பித்த வைகோ இப்போது வாரிசு அரசியலை கொண்டு வருகிறாரே என்று அதிருப்தி அடைந்தவர்களில் பலர் கட்சியை விட்டு வெளியேறி விட்டனர். வெளியேறி திமுகவில் இணைந்துவிட்டனர்.

 இந்த நிலையில் மதிமுகவில் மூத்த நிர்வாகியும் கட்சியின் அவைத் தலைவருமான திருப்பூர் துரைசாமி,  தலைமையுடன் ஏற்பட்ட மனக்கசப்பினால் கடந்த மாதம் 27ஆம் தேதி அன்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு கடிதம் ஒன்றை எழுதி கட்சிக்குள் பெரும் புயலை கிளப்பினார்.

d

 மதிமுக தொடங்கியபோது வாரிசு அரசியலுக்கு எதிரான வைகோவின் உணர்ச்சி பூர்வமான பேச்சைக் கேட்டு ஏராளமான தொண்டர்கள் கட்சியில் இணைந்தார்கள். ஆனால் அண்மை காலமாக அவரின் குழப்பமான செயல்பாடுகள் காரணத்தினால் கட்சியின் நிர்வாகிகளும் ,தொண்டர்களும் கட்சியில் இருந்து விலகி திமுகவில் இணைந்து விட்டார்கள் .  கட்சியில் மகனை அரவணைப்பதும் தற்போதைய சந்தர்ப்பவாத அரசியலும் தமிழக மக்களை எள்ளி நகையாட வைத்துவிட்டது.

 வைகோ இதை உணராமல் இருப்பது வேதனை அளிக்கிறது.  மதிமுக தொடங்கப்பட்டு 30 ஆண்டுகளாக உணர்ச்சிமிக்க அவரின் பேச்சை நம்பி வாழ்க்கையை இழந்த தோழர்கள் மேலும் ஏமாற்றம் அடையாமல் இருக்க வேண்டும் என்றால்,  மதிமுகவை தாய் கழகமான திமுகவுடன் இணைப்பதுதான் சமகால அரசியலுக்கு சாலச் சிறந்தது என்று கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.

ட்ச்

 இந்த கடிதம் மதிமுக வட்டாரத்தில் பெரும் புயலை கிளப்பியது . உட்கட்சிக்குள் பேச வேண்டிய விவகாரத்தை, கடிதம் எழுதி பொதுவெளியில் வெளியிட்டு கட்சிக்கு தலைகுனிவை ஏற்படுத்துகிறார் திருப்பூர் துரைசாமி.  அதனால் அவர் கடிதத்தை யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என்று கேட்டிருந்தார் துரை வைகோ. உடனே,   துரை வைகோ ஒரு சின்னப் பையன் அவர் பேசுவதை பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என்று பதிலடி கொடுத்தார் திருப்பூர் துரைசாமி. 

 இதன் பின்னர் திருப்பூர் துரைசாமியை பொறுப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று மதிமுகவின் மாநில துணை பொதுச்செயலாளர் ஏ. கே. மணி வைகோவுக்கு கடிதம் எழுதி இருந்தார் . திருப்பூர் துரைசாமிக்கு பதிலடி கொடுத்து வைகோவும் அறிக்கை வெளியிட்டிருந்தார்.

 இந்த நிலையில் திருப்பூர் துரைசாமி இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.  பொது வாழ்க்கையில் இருந்து தான் வழங்குவதாக அறிவித்திருக்கிறார்.  தனது வீட்டில் போட்டி பொதுக்குழு எதுவும் நடத்தவில்லை என்றும் திமுக உள்ளிட்ட எந்த அரசியல் கட்சிகளிலும் தான் சேரப் போவதில்லை என்றும் அறிவித்திருக்கிறார். பொது வாழ்வில் இருந்து விலகி இருக்க போவதாகவும் உறுதியாக அவர் தெரிவித்திருக்கிறார்.