“ஸ்டாலின் ஜெயலலிதாவின் வாரிசு” – திருமாவளவன் கூறும் விளக்கம்!

 

“ஸ்டாலின் ஜெயலலிதாவின் வாரிசு” – திருமாவளவன் கூறும் விளக்கம்!

திமுக கூட்டணியிலிருந்து விசிக விலகப் போகிறது என்ற அத்துனை யூகங்களையும் தவிடுபொடியாக்கி கூட்டணி இறுதிசெய்யப்பட்டது. ஆனானப்பட்ட வைகோவின் மதிமுகவே திமுக சின்னத்தில் ஆறு தொகுதிகளில் போட்டியிடுகிறது. இரு கம்யுனிஸ்ட் கட்சிகளுக்கும் தலா ஆறே ஒதுக்கப்பட்டுள்ளன. அதற்குச் சற்றும் குறையாமல் உரிய பிரதிநிதித்துவம் கொடுத்து விசிகவுக்கும் ஆறு தொகுதிகளை ஸ்டாலின் துணிந்து ஒதுக்கியிருக்கிறார். மிக முக்கியமாக ஆறு தொகுதிகளிலும் தனிச் சின்னத்தில் போட்டியிடுகிறது.

“ஸ்டாலின் ஜெயலலிதாவின் வாரிசு” – திருமாவளவன் கூறும் விளக்கம்!

இதெல்லாம் கவனிக்க வேண்டிய அம்சங்கள். ஆயினும் விசிகவின் வளர்ச்சியையும் நாம் குறைத்து மதிப்பிட முடியாது. ஆறு தொகுதிகளை ஒதுக்க சமரசம் இல்லாமல் திமுகவிடம் அழுத்தி பேசியது. திமுகவின் வெற்றியைக் காட்டிலும் ஸ்டாலினுக்கு விசிகவின் ஆறு தொகுதி மட்டுமே பிரதானமாகத் தெரிகிறது. அதனால் தான் அந்த ஆறு தொகுதிகளிலும் விசிகவுக்கு ஆதரவாகக் களமிறங்க நிர்வாகிகளை நியமித்திருக்கிறாராம். இந்த நிலையில் தனியார் நாளிதழ் ஒன்றுக்கு பேட்டி கொடுத்துள்ள திருமாவளவன் ஸ்டாலின் குறித்துப் பேசியிருக்கிறார்.

“ஸ்டாலின் ஜெயலலிதாவின் வாரிசு” – திருமாவளவன் கூறும் விளக்கம்!

திமுகவையும் ஸ்டாலினையும் எந்த அளவுக்கு நம்புகிறீர்கள் என்று முன்வைக்கப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த அவர், “நிச்சயமாக ஸ்டாலினை முழுமையாக நம்புகிறேன். நான் ஸ்டாலினை கருணாநிதியின் பிள்ளை, ஜெயலலிதாவின் வாரிசு என்று கூறுவேன். ஏனென்றால் உறுதியான சனாதன எதிர்ப்பு என்று கருத்தியல் சார்ந்து ஒரு முடிவை எடுக்கும்போது கருணாநிதியின் பிள்ளையாக அவர் தெரிகிறார். திமுக கூட்டணியை விட்டு விசிகவை அகற்ற எத்தனையோ சக்திகள் முயன்றன;

“ஸ்டாலின் ஜெயலலிதாவின் வாரிசு” – திருமாவளவன் கூறும் விளக்கம்!

குறிப்பாக, ‘மனு’ விவகாரத்தை இதற்குச் சரியான வாய்ப்பாக அவை பயன்படுத்தின; ஆனால் ஸ்டாலின் எனக்கு பக்கபலமாக நின்றார். பகைவர்களை அடையாளம் கண்ட பின் அவர்களுக்கு எதிராக எதற்கும் அஞ்சாமல் முன்னோக்கிச் செல்வதிலும், கூடவே அது நோக்கி இயக்கத்தையும் கட்டுப்பாடாக நிர்வகித்துச் செல்வதிலும் ஜெயலலிதாவை அவர் பிரதிபலிக்கிறார். சனாதனத்துக்கு எதிராக அவர் முன்னெடுக்கும் போரில் விசிக உறுதியான பக்கபலமாக இருக்கும்”என்றார்.