ஆளுநர் உரை வெத்து அறிக்கை இல்லை.. அரசின் கொள்கை மற்றும் செயல்திட்ட அறிக்கை - பேரவையில் ஸ்டாலின் விளக்கம்..

 
ஸ்டாலின்


 
இந்த அண்டின் முதல் சட்டமன்ற கூட்டத்தொடர் நேற்று முன் தினம் ஆளுநர் உரையுடன் தொடங்கியது.  இரண்டு நாட்கள் மட்டுமே நடைபெற்ற இந்தக் கூட்டத்தொடரில் பல்வேறு மசோதாக்கள் நிரைவேற்றப்பட்டது.  ஆளுநர் உரைக்கு  நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது எழுந்த  விவாதத்திற்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று பதில் அளித்தார். இதனையடுத்து சட்டமன்ற கூட்டத்தொடர் நிறைவுபெற்றது.  முன்னதாக ஆளுநரின் உரைக்கு பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.  ஆளுநரின் உரை வெத்து அறிக்கை ,   நமத்துப்போன பட்டாசு, அது முதல்வரை வாழ்த்தும் உரை  என்றெல்லாம் எதிக்கட்சிகள் விமர்சனம் செய்தன.

சட்டப்பேரவை

இந்த விமர்சனங்களுக்கு  பதிலளிக்கும் விதமாக ஆளுநர் உரை குறித்து சட்டப்பேரவையில் மு.க.ஸ்டாலின் விளக்கமளித்துள்ளார்.  அதில்,  2022-ம் ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் , கடந்த 5-ம் தேதியன்று ஆளுநர் பேரவையில்  முதல் உரையை ஆற்றினார்.  பொதுவாக ஆளுநர் உரை, அரசின் கொள்கை அறிக்கை, அதாவது  Statement of Policy என்று தான் சொல்லப்பட்டிருக்கிறது என்று  கூறினார்.  

மேலும்,  ”பொதுவாக, ஆட்சியாளர்களுடைய கொள்கைத் திட்டங்களை விளக்குவதே கவர்னருடைய பேருரை என்பதும், அக்கொள்கைத் திட்டங்களுக்கு ஏற்ப நிதியைப் பகிர்ந்தளிப்பதாகிய புள்ளி விவரங்களைக் கொண்டதே, வரவு செலவுத் திட்டம் என்பதுதான் நான் அறிந்துள்ள வரையில் உணர்ந்திருக்கிறேன்” என்று 1957 ஆம் ஆண்டு பேரறிஞர் அண்ணா பேசியதை சுட்டிக்காட்டிய ஸ்டாலின், ஆளுநர் உரை மிகுந்த கவனத்துடன் தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

முதலமைச்சர் ஸ்டாலின்

இந்த ஆளுநர் உரையைப் படித்து ஆராயும் நடுநிலையாளார்கள், அந்த உரை கொள்கை மற்றும் செயல்திட்ட அறிக்கையாக அதாவது Statement of Policy and Programme என அமைந்திருப்பதை ஏற்றுக்கொள்வார்கள் என்று மனதார நம்புவதாகக் கூறினார். அண்ணாவின் கூற்றுப்படி ஆளுநர் உரை அமைந்திருப்பதால் தான் உள்ளபடியே மகிழ்ச்சியடைவதாக குறிப்பிட்டார்.  மேலும் ஆளுநர் தன் உரையில்,  தமிழ்நாடு அரசு செயல்படக்கூடிய விதம் பற்றியும், அறிவித்துள்ள திட்டங்கள் குறித்தும், செயல்படுத்த இருக்கும் கொள்கைகள் குறித்தும்  விளக்காமாக பாராட்டிப் பேசியிருக்கிறார். அவருக்கு எனது பாராட்டுக்கள் என்றும் ஸ்டாலின் தெரிவித்தார்.