அப்பா, மகனுக்கு ஒரே நேரத்தில் செக்... டிஎஸ்பி தலைமையில் ஐவர் குழு - சூடுபிடிக்கும் விசாரணை!

 
ஓபிஎஸ்

அதிமுக ஒருங்கிணைப்பாளரும் போடிநாயக்கனூர் தொகுதி எம்எல்ஏ ஓ.பன்னீர்செல்வம் 2021ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலின்போது தாக்கல் செய்த வேட்பு மனுவில் தவறான தகவலை அளித்ததாகவும், சொத்து விபரங்களை மறைத்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. மேலும் 2019ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் தேனி தொகுதியில் போட்டியிட்ட ஓபிஎஸ் மகன் ரவீந்திர நாத் தனது வேட்பு மனு தாக்கலில் சொத்து விவரங்களை மறைத்ததாகவும் சொல்லப்பட்டது.

ஓபிஎஸ் மகன் வெற்றிக்கு எதிரான வழக்கு... உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

அவர் நடத்தி வரும் நிறுவனங்கள் மீதான தகவலை வேட்பு மனு தாக்கலின்போது குறிப்பிடவில்லை என்றும், எனவே இவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தேனி மாவட்டத்தைச் சேர்ந்த மிலானி என்பவர் தேனி மாவட்ட சட்டப்பேரவை, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீதான வழக்கை விசாரிக்கும் தனி நீதிமன்றத்தில் கடந்த டிசம்பர் 30ஆம் தேதி மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கை ஜனவரி 7ஆம் தேதி விசாரித்த நீதிபதி பன்னீர்செல்வம், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், அவர் மகன் ரவீந்தர்நாத் மீது தேனி மாவட்ட குற்றப்பிரிவு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டார்.

மூன்று வேளாண் சட்டங்கள் வாபஸ் பிரதமர் மோடிக்கு ஓபிஎஸ் நன்றி

மேலும் வழக்கை தொடர்ந்த மிலானிக்கு காவல் துறையினர் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் ஆணையிட்டார். இந்த நிலையில் இவர்கள் மீதான வழக்கை விசாரிக்க தேனி மாவட்ட குற்றப்பிரிவு துணை கண்காணிப்பாளர் சுந்தர்ராஜ் தலைமையில் 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. மிலானிக்கு நான்கு பேர் கொண்ட காவலர் குழு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் மீதும் அவரது மகனும் தேனி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத் மீதும் விரைவில் விசாரணை நடைபெற உள்ளது.