எடப்பாடி பழனிசாமியுடன் மோதலா? எஸ்பி வேலுமணி விளக்கம்

 
velumani

அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியுடன் கருத்து வேறுபாடு என தகவல்கள் வெளியான நிலையில், தானாக ஊடகங்களை அழைத்து பேட்டியளித்த  முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி," எங்களுக்குள் எந்த பிரச்சினையும் இல்லை" என விளக்கம் அளித்தார்.

velumani

கோவை விமான நிலையத்தில் முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, "தேர்தல் விதிமுறை இருப்பதால் அதிகமாக பத்திரிகையாளர்களை சந்திக்க முடியவில்லை,எடப்பாடியார் சென்னை சென்றார், அவரை வழியனுப்ப வந்தோம். கோவை மாவட்டம் உட்பட  தமிழகம் முழுவதும் மழை பெய்கின்றது. இருந்தாலும் குடிநீர் பிரச்சினை இருக்கின்றது.

கோவை மாவட்டத்தில் அதிமுக கொண்டு வந்த திட்டங்கள்தான் இன்னமும் செயல்பாட்டில் இருக்கின்றது. சீரான குடிநீர் வழங்க நடவடிக்கைகள் எடுக்க  வேண்டும். மேலும் பல ஊடகங்கள் தவறான செய்தியை பரப்புகின்றன, குறிப்பாக தினமலர் நாளிதழ்  நாங்கள் மதிக்க கூடிய பத்திரிகையாக இருந்தது, ஒரு கட்சியை சார்ந்து , தினமும் எங்களை டேமேஜ் பண்ணுவதை வழக்கமாக வைத்திருக்கின்றனர். சிறப்பான முறையில் எடப்பாடியார் ஆட்சி நடத்தினார், தமிழக மக்கள் மீண்டும் எடப்பாடி முதல்வராக வேண்டும் என நினைக்கின்றனர். அதிமுக எதிர் கட்சியாக ஆன பின்னரும் ஒரு சிலரின் ஆஜென்டாவை எழுதுகின்றனர். எங்களுக்குள் பிளவு என எழுதுகின்றனர். எங்களுக்குள்  எந்த குழப்பமும் கிடையாது குழப்பம் செய்தவர்கள் வெளியே போய்விட்டனர்.

ஒரு பிம்பத்தை உருவாக்கவே பார்க்கின்றனர். அதிமுக எடப்பாடி தலைமையில் மிகப்பெரிய அளவில் வெற்றி நடை போட்டு வருகிறது. எங்களுக்குள் எந்த பிரச்சினையும் இல்லை. ஒரு சில ஊடகங்கள் பிம்பத்தை உருவாக்குகின்றன, விவாதம் நடத்துகின்றனர்,  அதிமுக பேரை சென்னால் பேப்பரை படிப்பார்கள் என்பதற்காக இப்படி எழுதுகின்றன. எப்பொழுது தேர்தல் வந்தாலும் அதிமுக ஆட்சி அமையும்." என்றார்.