அதிமுகவில் இருந்து ஒதுக்கப்படும் எஸ்.பி.வேலுமணி, சி.வி. சண்முகம்?

 
“திருமாவளவன் முதல்வராவது இபிஎஸ்க்கு பிடிக்கவில்லை; இறுதிவரை நான் மட்டுமே முதல்வராக இருக்க வேண்டுமென கூறினார்”- சி.வி.சண்முகம் 

இடைத்தேர்தலுக்காக அதிமுக நட்சத்திர பேச்சாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ள நிலையில், அதில் எஸ்.பி.வேலுமணி, சி.வி. சண்முகம் ஆகியோர்களின் பெயர்கள் இடம்பெறவில்லை.

மதுராந்தகம், தாராபுரம் ஆகிய 2 தொகுதிகளிலும் த.வெ.க., தி.மு.க, அ.திமு.க, கம்யூனிஸ்டு கட்சிகள், நாம் தமிழர் கட்சி ஆகிய கட்சிகள் போட்டியிடுகின்றன. இதன் மூலம் இடைத்தேர்தலில் 5 முனைப்போட்டி நிலவுகிறது. மதுராந்தகம் தொகுதியில் த.வெ.க. சார்பில் மரகதம் குமரவேல், தி.மு.க. வேட்பாளராக பரந்தாமன், அ.தி.மு.க. சார்பில் கணிதா சம்பத், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு சார்பில் சுகந்தி, நாம் தமிழர் கட்சி வேட்பாளராக ஜானகிராமன் ஆகியோர் களம் இறங்கி உள்ளனர். 2 தொகுதிகளிலும் போட்டியிடுபவர்களின் இறுதி வேட்பாளர் பட்டியல் நாளை (19) வெளியாக உள்ளது. இதை தொடர்ந்து அடுத்த வாரம் அரசியல் கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட முடிவு செய்து இருக்கிறார்கள். இதற்கான ஏற்பாடுகளை அந்தந்த கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் மேற்கொண்டு உள்ளனர். 

இந்நிலையில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய தொகுதிகளில் கட்சியின் சார்பில் பிரச்சாரம் செய்வதற்காக, 40 நட்சத்திரப் பேச்சாளர்கள் அடங்கிய பட்டியலை அதிமுக இந்தியத் தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்தது. இந்தப் பட்டியலில் நத்தம் விசுவநாதன், எஸ். பி. வேலுமணி, சி. வி. சண்முகம் மற்றும் தங்கமணி ஆகியோரின் பெயர்கள் இடம்பெறவில்லை. மீண்டும்  அதிமுகவில் பிரச்சனை இருப்பது உறுதியாக தெரிகிறது.