எஸ். பி. வேலுமணிக்கு களங்கம் விளைவிக்கவில்லை - கே. என். நேருவுக்கு எதிரான வழக்கு ரத்து

 
க்ன்

அமைச்சர் கே. என். நேருவுக்கு எதிரான அவதூறு வழக்கை ரத்து செய்துள்ளது சென்னை உயர் நீதிமன்றம்.  முன்னாள் அமைச்சர் எஸ். பி. வேலுமணியின் புகழுக்கு களங்கம் விளைவிக்கும் எந்த கருத்தையும் கே. என். நேரு. சொல்லவில்லை என்று சொல்லி நீதிமன்றம் இந்த வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டிருக்கிறது.

 திமுக முதன்மைச் செயலாளரும் நகரப்புற வளர்ச்சித் துறை அமைச்சருமானவர் கே. என். நேரு,   இவர் கடந்த 2020 ஆம் ஆண்டில் கோவையில் பேசிய போது இன்னும் 11 மாதங்களில் அமைச்சர் எஸ். பி. வேலுமணி கோவை சிறையில் அடைக்கப்படுவார் என்று தெரிவித்திருந்தார்.   அப்போது எஸ்.பி. வேலுமணி அதிமுகவின் அமைச்சராக இருந்தார்.   அவரை எதிர்த்து கோவையில் நடந்த கூட்டத்தில் பேசிய போது தான் கே. என். நேரு அடுத்து திமுக தான் ஆட்சிக்கு வரும்.  திமுக ஆட்சிக்கு வந்ததும் எஸ். பி. வேலுமணி சிறையில் அடைக்கப்படுவார் என்று எச்சரித்து இருந்தார்.

ச்ப்

இது குறித்து கே .என். நேரு 20220 ஆம் ஆண்டு ஜூன் 8-ம் தேதி அன்று ஒரு அறிக்கையும் வெளியிட்டார்.   அந்த அறிக்கையில்,   உள்ளாட்சித் துறையை கொள்ளையடித்துக் கொண்டிருக்கும் அமைச்சர் எஸ் .பி. வேலுமணி குறைகுடம் கூத்தாடும் என்பது போல் திமுக தலைவரை விமர்சனம் செய்ததற்கு  கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன் .

சிறைக்கு செல்லும் நாள் நெருங்கி விட்டது என்கிற பீதியில் சிறுமதியுடன் அறிக்கை என்கிற பெயரில் ஒரு உளறலை வெளியிட்டு இருக்கிறார்.  இது அவரது அறியாமையை காட்டுகிறது.  அடிக்கின்ற கொள்ளையில் கொரோனாவின் தாக்கத்தையே மறந்து விட்டு பூனை கண்ணை மூடிக்கொண்டது என்கிற மனநிலையில் அறிக்கையை வெளியிட்டு இருக்கிறார் வேலுமணி.    அமைச்சர் பதவியை தனது சகோதரரின் கம்பெனிகளுக்கும் உறவினர்கள், நெருங்கிய நண்பர்களுக்கும் அள்ளி கொடுக்கும் பதவியாக மாற்றி இன்றைக்கு தமிழக அமைச்சரவையில் மூத்த கொள்ளையராக,  முதல் கொள்ளையராக வலம் வருகிறார் வேலுமணி .

க்ன்

வீராப்பு பேசி வீண் வம்பு விலைக்கு வாங்குவதற்கு சமம் என்று வேலுமணியை எச்சரிக்க விரும்புகிறேன்.   கோட்டையில் அமர வாய்ப்பு கிடைத்துவிட்டது என்பதற்காக திமுக தலைவரை பார்த்து சுட்டு விரல் நீட்டி பேச தகுதி இல்லை .  இன்னும் 11 மாதங்கள் தான் வேலுமணி.. ஆகாயத்தில் எரிந்த கல் அங்கேயே நிற்காது.  பணமும் பதவியும் பின்னே வராது அடித்த கொள்ளையும் சொத்தும் பின்னே வராது.  கூப்பிட்ட குரலுக்கு ஓடி வருகின்ற காவல் துறை அதிகாரிகளும் வர மாட்டார்கள்.  ஆனால் அன்றைய தினம் நீங்கள் ஆடிய ஆட்டத்திற்கும் அராஜகத்தை கட்டவிழ்த்து விட்டதற்கும் அடக்கு முறையை திமுக தொண்டர்கள் மீதும் பத்திரிக்கையாளர்கள் மீதும் ஏவி விட்டதற்கும்  முடிவு பிறக்கும்.   அன்றைக்கு நீங்கள் பத்திரிகையாளர்களும் திமுக தொண்டர்களும் அடைக்கப்பட்ட கோவை மத்திய சிறைச்சாலையில் நிச்சயம் அடைக்கப்படுவீர்கள் என்று எச்சரிக்க விரும்புகிறேன் என்று தெரிவித்திருந்தார்.

 எஸ். பி. வேலுமணி அமைச்சர் என்பதால் அமைச்சரின் பணி குறித்து களங்கம் கற்பித்ததாக சொல்லி கே. என். நேருவுக்கு எதிராக கோவை நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது.

ஹ்

 இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார் கே. என். நேரு.     இந்த மனு மீதான விசாரணை நேற்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்தது.   இந்த மனுவை விசாரித்த நீதிபதி இளந்திரையன்,   நேருவின் பேச்சு அமைச்சரின் பணி குறித்து அவதூறு பரப்புகின்ற வகையில் இல்லை என்று குறிப்பிட்டார்.   மேலும்,   எஸ். பி. வேலுமணியின் புகழுக்கு களங்கம் விளைவிக்கும் எந்த கருத்தையும் கே .என். நேரு சொல்லவில்லை என்று சொல்லி அமைச்சர் நேருவுக்கு எதிரான அவதூறு வழக்கு ரத்து செய்து உத்தரவிட்டார் நீதிபதி இளந்திரையன்.