ஒரு பெண், 2 ஆண் அமைச்சர்களை பதவியில் இருந்து தூக்க விஜய் திட்டம்
புதிய அமைச்சர்களின் செயல்பாடுகளில் அதிருப்தியின் எதிரொலியாக தமிழக அமைச்சரவையில் விரைவில் மாற்றம் செய்யப்படவுள்ளது.
தமிழக அமைச்சரவையில் விரைவில் மாற்றம் செய்யப்பட உள்ளது எனவும், 3 முதல் 4 தவெக அமைச்சர்கள் மற்றும் அவர்களது துறைகள் மாற்றம் செய்யப்பட உள்ளன என தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் முடிந்தவுடன் அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட உள்ளது எனவும், ஒரு பெண் அமைச்சர் மற்றும் 2 ஆண் அமைச்சர்கள் லிஸ்ட்டில் இடம் பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. புதிய அமைச்சர்கள் செயல்பாடுகளில் முதல்வர் விஜய்க்கு திருப்தி இல்லாததால் இந்த நடவடிக்கையை எடுக்கப்படுவதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. காங்கிரசை சேர்ந்த அமைச்சர்களை மாற்ற வாய்ப்பு இல்லை என தெரிகிறது. அதேபோன்று தமிழக வெற்றி கழக அமைச்சர் பார்த்திபன் அவர்களையும் மாற்றுவதற்கான வாய்ப்பு இல்லை. அமைச்சர்களும் துறைகளும் மாற்றப்பட இருக்கிறது.

