நாட்டின் சொத்துக்களை மோடி அரசு விற்கிறது... சோனியா காந்தி

 
சோனியா காந்தி

நாட்டின் சொத்துக்களை மோடி அரசு விற்கிறது என்று காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி குற்றம் சாட்டினார்.

காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற கூட்டத்தில் அந்த கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி பேசியதாவது: மத்திய  அரசின் 3  வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தில் உயிர் தியாகம் செய்த 700 விவசாயிகளை கவுரவிப்போம். மோடி அரசாங்கம் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மீது உணர்வற்றது. விலைவாசி உயர்வு ஒவ்வொரு குடும்பத்தின் மாதாந்திர பட்ஜெட்டை எரிக்கிறது. 

விவசாயிகள் போராட்டம்

சாதாரண மக்கள் அவதிப்படுகின்றனர். நாட்டின் சொத்துக்களை மோடி அரசு விற்கிறது. பொதுத்துறை நிறுவனங்கள் அரசாங்கத்தால் சிதைக்கப்படுகின்றன. எல்லை பிரச்சினைகள் குறித்து நாடாளுமன்றத்தில் முழு விவாதம் நடத்த வேண்டும். 12 மாநிலங்களவை எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டது தவறானது மற்றும் முன்னெப்போதும் இல்லாதது. அது (எம்.பி.க்கள் சஸ்பெண்ட்) ஏற்றுக்கொள்ள முடியாதது. இடைநீக்கம் செய்யப்பட்ட எம்.பி.க்களுடன் நாம் ஒற்றுமையாக இருக்கிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மோடி

பிரதமர் நரேந்திர மோடி கடந்த பிப்ரவரியில், அரசாங்கத்திற்கு வணிகத்தில் இருக்க எந்த வேலையும் இல்லை என்று தெரிவித்தார். மேலும் 100 பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்கும் திட்டத்தையும் அறிவித்தார். அதேசமயம் பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை தனியாருக்கு விற்கும் மத்திய அரசுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.