இந்த நாயிகளுக்கு.. எம்பி ஆனப்புறம் கூட இப்படி தரம் கெட்டத்தனமா எழுதுறார்ன்னா... சோனியா விளாசல்
வடநாட்டவர்களை தமிழர்கள் தாக்குகிறார்கள் என்பதெல்லாம் மிகை . இது வந்தோரை வாழவைக்கும் தமிழ்நாடு. தெலுங்கர், வடுகர், மலையாளி, மைசூர் என யாராயிருந்தாலும், திருட்டு ரயிலே ஏறி வந்தாலும் அரியணையில் ஏற்றி அழகு பார்ப்போமேயன்றி அடித்து துரத்துவதில்லை என்று தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார் நடிகை கஸ்தூரி.
இதைப்படித்துவிட்டு, திமுகவை சீண்டுகிறார் கஸ்தூரி, குறிப்பாக கலைஞர் கருணாநிதியை சீண்டுகிறார் கஸ்தூரி என்று அக்கட்சியினர் கொதித்தெழுந்துள்ளனர்.
திமுக எம்பி எம்.எம்.அப்துல்லா, ’’கலைஞர் திருட்டு ரயிலில் தான் வந்தார்னு நீ சொன்னீன்னா…
1. அதை அவரே எங்காவது பேசி எழுயிருக்க வேண்டும் - ஆனால் எந்த இடத்திலும் அவர் அப்படி பதிவு செய்யவில்லை.
2. சம்மந்தப்பட்ட டி டி ஆர் யாரேனும் அவரை தான் பிடித்ததாக சொல்லியிருக்கணும்..எழுதி இருக்கணும் - ஆனால் எந்த ஒரு டி டி ஆரும் அப்படி பதிவு செய்யவில்லை.
மேலே சொன்ன ரெண்டு பாயிண்ட்டும் இல்லாம போனதால மூனாவதா ஒரே ஒரு ஆப்ஷன் தான் இருக்கு!!
அது என்னன்னா கலைஞரோட உடன் வந்த உன்னோட பாட்டி உன்கிட்ட ‘’நானும் கலைஞரும் திருட்டு தனமா வீட்டை விட்டு ஓடி ரயிலேறி போனோம்னு’’ சொல்லியிருக்கணும்.’’என்று தனது வலைத்தளத்தில் பதிவிட்டிருக்கிறார்.
இதற்கு பத்திரிகையாளர் சோனியா அருண்குமார், ‘’எம்பி ஆனப்புறம் கூட இப்படி தரம் கெட்டத்தனமா எழுதுறார்ன்னா இதுக்கு முன்ன எவ்வளவு கேவலமான மனநிலைல இருந்திருப்பாரு. இவரு வளர்த்துவிட்ட கும்பல் தான் இன்னைக்கு இணையத்துல திமுகவ தெருவுல இழுத்து விடுவதே. இதுல இவர் தலைமைல சின்னமலைல உதய்நிதிக்கு வேலை பாக்குறேன்னு ஒரு சைக்கோ கும்பல் வேற.
இந்த நாயிகளுக்கு அதுங்க பேசுறதுலாம் வலிக்கிதுன்னு ஒரமா உக்காந்து அழுவாங்கன்னு வேற நெனப்பு. சங்கிகளும் இதுகளும் வேற வேற இல்ல. கஸ்தூரிக்கு எதிரா எம்எம் அப்துல்லா பொங்கிட்டார்ன்னு ஃபயர் விட்டுட்ருக்காய்ங்க. ஒரு காலத்துல கஸ்தூரி மாதிரி திமுக, கலைஞர், ஸ்டாலின மோசமா பேசின கும்பலோட தான் இப்ப முழு நேரமும் அவர் குப்பை கொட்டிட்டு இருக்கதேன்னு இவங்களுக்கு எப்படி புரிய வெக்கிறது?’’என்று விளாசி இருக்கிறார்.