யாராவது முதல்வரை தட்டி எழுப்புங்கள்; ரொம்ப நாளாக தூக்கத்தில் இருக்கிறார் - குஷ்பு

 
k

 முதல்வர் ஸ்டாலின் ரொம்ப நாளாக தூக்கத்தில் இருக்கிறார்.  அவரை யாராவது தட்டி எழுப்புங்கள் என்று  சொல்கிறார் குஷ்பு.

 கோவை மாநகரத்தில் 24 மணி நேரத்தில் அடுத்தடுத்து இரண்டு கொலைகள் அரங்கேறி இருப்பது தமிழக முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கின்றன. அதிலும் குறிப்பாக நீதிமன்றத்தில் கையெழுத்திட வந்த இளைஞரை நீதிமன்ற வளாகத்தின் பின்புறத்திலேயே மக்கள் நடமாட்டம் அதிகம் இருந்த பகுதியில் நான்கு பேர் கொண்ட கும்பல் வெட்டி கொலை செய்திருக்கிறது.

k

 இந்த படுகொலைக்கு பின்னரும் அந்த கும்பல் சர்வ சாதாரணமாக நடந்து தப்பித்து கூட ஓடாமல் அங்கிருந்து சர்வ சாதாரணமாக நடந்து சென்றிருக்கிறது.  இது தொடர்பாக வெளியாகி உள்ள வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.  பட்டப் பகலில் நடந்த கொலை சம்பவம் தொடர்பாக அரசியல் கட்சித் தலைவர்களை கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றார்கள்.  

 இது குறித்து பாஜக நிர்வாகி குஷ்பு ,   கோவை நீதிமன்றம் அருகே பட்டப்பகலில் வாலிபால் ஒருவர் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டுள்ளார் . தமிழகத்தில் சட்டம் ஒழுங்கற்ற நிலை இருக்கிறது.  ஆனால் முதல்வர் ஸ்டாலின்,   தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருக்கிறது என்கிறார்.  அவர் ரொம்ப நாளாக தூக்கத்தில் உள்ளார்.   யாராவது அவரை எழுப்பி உண்மையான படத்தை காட்ட முடியுமா?  நீண்ட நாட்களாக உறக்கத்தில் இருக்கிறார் முதல்வர் ஸ்டாலின் என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.


 மேலும்,  காவல் நிலையத்தில் புகார் கொடுக்கச் சென்ற மூதாட்டி ஒருவரை போலீசார் பிடித்து தள்ளும் வீடியோவை வெளியிட்டு,  உதவிக்காக காவல் நிலையத்தின் கதவை தட்டும் வயதான பெண்ணை இப்படித்தான் நடத்துவதா? இதுதான் திராவிட மாடலா?  சுயமரியாதை என்று அடித்துக் கொள்கிறார்களே.. திமுக ஆட்சியின் திமுக ஆட்சியில் தமிழகத்தின் இந்த பரிதாப நிலை நீடிக்கத்தான் செய்கிறது என்றும் கடுமையாக விமர்சித்துள்ளார்.