அடுத்தடுத்த சர்ச்சைகளில் சிக்கும் சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரி- பதவி பறிக்கப்படுமா?

 
ச்

சமூக நலத்துறை அமைச்சர் கே. ஜெகதீஸ்வரி அடுத்தடுத்த சர்ச்சைகளில் சிக்குவதால் அவரது பதவி பறிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

Image


சமீபத்தில் விருதுநகரில் நடைபெற்ற சிலம்பம் போட்டிகள் வழங்கும் அரசு விழாவில் அமைச்சர் ஜெகதீஸ்வரியின் பெயர் அழைப்பிதழிலும் பதாகையிலும் மற்றொரு அமைச்சர் கீர்த்தனாவின் பெயருக்குப் பின்னால் (இரண்டாவதாக) அச்சிடப்பட்டிருந்தது. தான் மாவட்டத்தின் உள்ளூர் அமைச்சர் என்று கூறி, விழாவிற்கு வந்திருந்த மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகளிடம் அமைச்சர் ஜெகதீஸ்வரி வெளிப்படையாகக் கேள்வி எழுப்பி கண்டனம் தெரிவித்தார். இந்த பரபரப்பு அடங்குவதற்குள் பிரபல ரவுடி ராக்கெட் ராஜாவுடன் இருந்த புகைப்படம் வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. 

இந்நிலையில் ராஜபாளையம் தொகுதியில் தனது அனுமதியின்றி வலம் வந்து அலுவலகங்களில் சுற்றிய மற்றொரு கட்சி நிர்வாகி லட்சுமணன் மீது அமைச்சர் ஜெகதீஸ்வரி ஆத்திரமடைந்தார். மற்றொரு நிர்வாகியான ராஜகுரு என்பவரிடம் அமைச்சர் தொலைபேசியில் பேசியபோது, லட்சுமணனைப் போலீஸ் மூலம் உள்ளே தள்ளுவேன் என்றும் கடுமையாகப் பேசி மிரட்டியது போன்ற ஆடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கும் அவரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்குவது தொடர்பாக முதல்வர் விஜய் தீவிரமாக ஆலோசித்து வருகிறார்.