பாகிஸ்தானுடன் நட்புறவு அதிகரித்தால் நமது வணிகமும் பெருகும்... நவ்ஜோத் சிங் சித்து
பாகிஸ்தானுடன் நட்புறவு அதிகரித்தால் நமது வணிகமும் பெருகும் என்று நவ்ஜோத் சிங் சித்து கூறியதற்கு அவரது கட்சியை (காங்கிரஸ்) எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் அம்மாநில காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது சித்து கூறியதாவது: பாகிஸ்தானுடன் நட்புறவு அதிகரித்தால் நமது வணிகமும் பெருகும். நமது முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் இந்தியாவிலிருந்து பாகிஸ்தானுக்கு அமன் எமன் பேருந்து சேவையை தொடங்கியபோது அவர் செய்த திட்டத்தை நான் பாராட்டுகிறேன் என்று தெரிவித்தார். பாகிஸ்தானுடன் நட்புறவை பலப்படுத்த வேண்டும் என்று சித்து கூறியதற்கு காங்கிரஸ் கட்சியை விமர்சனம் செய்துள்ளது.
ஸ்ரீ ஆனந்த்பூர் சாஹிப் நாடாளுமன்ற தொகுதி எம்.பி.யும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான மணிஷ் திவாரி இது தொடர்பாக கூறியதாவது: தீவிரவாதிகளை இந்தியாவுக்கு அனுப்புவதையும், போதைப்பொருட்கள் மற்றும் ஆயுதங்களை டிரோன்கள் மூலம் நம் பகுதிகளில் வீசுவதையும் பாகிஸ்தான் நிறுத்தும் வரை, பாகிஸ்தானுடன் வர்த்தகம் தொடர்பான பேச்சு வார்த்தை நடத்துவது பயனற்றது மற்றும் வீண்.
கேப்டன் (அமரீந்தர் சிங்) 20 ஆண்டுகளாக காங்கிரஸ் தலைவராகவும், ஒன்பதரை ஆண்டுகளாக பஞ்சாப் முதல்வராகவும் இருந்துள்ளார். எனவே நிச்சயமாக இந்த (பா.ஜ.க.-அமரீந்தர் சிங் கட்சி) கூட்டணி மாநில அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்தும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.