பின்வாசல் அரசியல் சகஜம், எதிர்காலத்திலும் இதனை எதிர்கொள்வோம்.. சித்தராமையா

 
சித்தராமையா

பின்வாசல் அரசியல் சகஜம். எதிர்காலத்திலும் இதனை எதிர்கொள்வோம் என்று கர்நாடக மேலவை தேர்தல் முடிவு குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் சித்தராமையா தெரிவித்தார். 

கர்நாடக மேலவையில் மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கை 75 ஆகும். இதில் 25 உறுப்பினர்கள் இடங்கள் காலியாக இருந்தது. இதனையடுத்து தேர்தல் ஆணையம் கடந்த 10ம் தேதியன்று  காலியாக உள்ள 25 உறுப்பினர்கள் பதவிக்கு தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் அம்மாநிலத்தில உள்ள ஊரக மற்றும் நகராட்சி மன்ற தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் வாக்களித்தனர். நேற்று முன்தினம் வாக்கு எண்ணிக்கை நடந்து தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டது.

இந்திய தேர்தல் ஆணையம்

மேலவை தேர்தலில் பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் தலா 11 இடங்களில் வெற்றி பெற்றது. மதசார்ப்பற்ற ஜனதா தளம் 2 இடங்களில் வெற்றி பெற்றது. சுயேட்சை வேட்பாளர் ஒருவர் வெற்றி பெற்றார். மேலவை தேர்தல் முடிவுகள் குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் சித்தராமையாக கூறியதாவது: இது (தேர்தல் முடிவுகள்) சாமானியர்களின் நலனுக்காக மேலும் போராடவும், எதிர்காலத் தேர்தல்களை நம்பிக்கையுடன் எதிர்கொள்ளவும் காங்கிரஸை ஊக்குவிக்கும்.

பா.ஜ.க.

மற்ற கட்சிகள் மறைமுகமாக கைகோர்க்காமல் இருந்திருந்தால்  நாங்கள் 15க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்றிருப்போம். இந்த பின்வாசல் அரசியல் சகஜம். எதிர்காலத்திலும் இதனை எதிர்கொள்வோம். பூஜ்ய சாதனைகளின் அடிப்படையில்  எந்த தேர்தலிலும் வெற்றி பெற முடியாது என்பதை பா.ஜ.க. அறிந்திருக்கிறது. எனவே அவர்கள் தேர்தலின்போது மதமாற்ற தடைச் சட்டம் பற்றி செய்தி வெளியிட்டுள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.