’’இரண்டு பேர் தொண்டையிலும் சுடுங்க... அப்புறம் ஒரு முடிவுக்கு வரலாம்..’’ ’’இரண்டு பேர் தொண்டையிலும் சுடுங்க... அப்புறம் ஒரு முடிவுக்கு வரலாம்..’’

 
ம்mக்

அதிமுகவின் இரட்டை இலைகள் போல் இருந்தார்கள் பன்னீர்செல்வமும் பழனிச்சாமியும்.  ஆனால் ஒற்றைத் தலைமை விவகாரத்தால் இருவரும் இருவேறு திசையில் பயணிக்க தொடங்கி விட்டார்கள். 

 பழனிச்சாமி தான்தான் அதிமுகவின் பொதுச் செயலாளர் என்று பொதுக்குழுவைக் கூட்டி அறிவித்திருக்கிறார்.  ஆனால் அந்த பொதுக்குழு செல்லாது என்று பன்னீர்செல்வம் அறிவித்திருக்கிறார் . இவர்களுக்கு இடையேயான இந்த ஏட்டிக்கு போட்டி நீடித்து வருகிறது.

க்

 இந்த நிலையில் இரு தரப்பினரும் தங்கள் செல்வாக்கை நிரூபிக்க மாநாடு,  பொதுக்கூட்டங்களை நடத்த தொடங்கி விட்டனர்.  திருச்சியில் மாநாடு நடத்தி இருக்கும் பன்னீர்செல்வம் அடுத்து சேலத்தில் மாநாடு நடத்த ஆயத்தமாகி வருகிறார்.  பழனிச்சாமி மதுரையில் மாநாடு நடத்த ஆயத்தமாகி வருகிறார்.

பன்னீர்செல்வத்தையும் பழனிச்சாமியையும் அதிமுகவின் நிறுவனர் மக்கள் திலகம் எம்ஜிஆர் போல் கண்ணாடி, சால்வை, தொப்பி  அணிந்து அழகு பார்க்கிறார்கள் அவர்களது அணியினர்.  

 எம். ஜி. ஆர் போல் காட்சியளிக்கும் பன்னீர்செல்வம் , பழனிச்சாமியின்  புகைப்படங்களை வெளியிட்டு எந்த எம்ஜிஆர் பெஸ்ட் என்று சொல்லுங்கள் என்று வலைத்தளத்தில் பதிவிட, ’’ இரண்டு பேர் தொண்டையிலும் சுடுங்க.  அப்புறம் யார் அவரை மாதிரியே பேசுகிறார் என்று பார்த்து ஒரு முடிவுக்கு வரலாம்’’ என்கிறார் ஒரு நெட்டிசன்.   இதை அதிமுகவின் முன்னாள் எம்பி கே.சி. பழனிச்சாமி தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து,   இதில் எந்த எம்ஜிஆர் பெஸ்ட்? என்று அவரும் கேள்வி எழுப்பி இருக்கிறார்.

 இதை பார்த்து எம்ஜிஆர் ரசிகர்கள் கொந்தளித்தது போய் இருக்கிறார்கள்.  ’’அவன் புரட்சித்தலைவர் தொண்டையில் சுடப்பட்டு வேதனைப்பட்டதை நக்கல் அடித்திருக்கிறான். நீங்கள் அதை பகிர்ந்து உள்ளீர்கள்’’ என்று கேட்க ஆவேசப்பட்டுள்ளார்கள்.

க்