அதிர்ச்சி! பிரதமர் மோடி படத்துடன் சுடுகாட்டுக்கு போய் மொட்டை போட்ட காங்கிரசார்!

 
k

பிரதமர் மோடியின் படத்துடன் சுடுகாட்டுக்கு சென்று மொட்டை போட்டுக் கொண்டு காங்கிரசார் நடத்திய போராட்டம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

கடந்த 2019 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தில் மோடி என்கிற குடும்பப் பெயர் பற்றி அவதூறாக பேசியதாக ராகுல் காந்தி மீது தொடரப்பட்ட அவதூறு வழக்கில் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சூரத் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.   பின்னர் அவருக்கு நீதிமன்ற ஜாமீன் வழங்கப்பட்டிருக்கிறது.  கர்நாடகா மாநிலத்தின் கோலாரில் நடந்த பிரச்சாரத்தில் ராகுல் காந்தி பேசியது தான் இந்த அளவுக்கு சர்ச்சையாக மாறியிருக்கிறது. ராகுலுக்கு எதிராக திரும்பி இருக்கிறது

ph.

 இது தொடர்பாக சூரத்தில் தான் வழக்கு தொடரப்பட்டது.   அந்த வழக்கில்  நீதிபதி அளித்த தீர்ப்பில் அவருக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தெரிவித்துள்ளது.   இதை அடுத்து ராகுல்காந்தி தரப்பில் ஜாமீன் கோரப்பட்டதை அடுத்து நீதிமன்றம் நிபந்தனை  ஜாமீன் வழங்கியது.  30 நாட்களில் மேல்முறையீடு செய்ய ராகுல் காந்திக்கு அனுமதி வழங்கப்பட்டது.  சிறை தண்டனை வழங்கப்பட்டதால் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். ராகுல் காந்தி . இதனால் அரசு பங்களாவை காலி செய்வதற்கான நோட்டீஸ் ராகுல் காந்திக்கு அனுப்பப்பட்டது.

காங்கிரஸ் கட்சியினர் இதை கண்டித்து நாடு முழுவதும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.   கன்னியாகுமரி மாவட்டத்திலும் தமிழக காங்கிரசார் பல்வேறு போராட்டங்களை தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.   நாகர்கோவில் மாநகர காங்கிரஸ் தலைவர் நவீன் குமார் தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் சிலர் அனைத்து சமூகத்திற்கான சுடுகாட்டிற்கு இன்று சென்றிருக்கிறார்கள்.   கையில் பிரதமர் நரேந்திர மோடியின்  புகைப்படத்தையும் கொண்டு சென்றிருக்கிறார்கள். சுடுகாட்டில் கையில் பிரதமர் மோடி படத்துடன் மொட்டை போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.  இந்த சம்பவம் கன்னியாகுமரி மாவட்டத்தில் மட்டுமல்லாமல் அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.