மகாராஷ்டிராவில் மகா விகாஸ் அகாடி அரசாங்கம் வீழ்ச்சிக்கு மாநில காங்கிரஸ் தலைவர்தான் காரணம்... சிவ சேனா குற்றச்சாட்டு

 
நாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்ததும்…..கொந்தளித்த சிவ சேனா தலைவர் உத்தவ் தாக்கரே! சூடு பிடிக்கும் ஆரே விவகாரம்

மகாராஷ்டிராவில் சிவ சேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் மகா விகாஸ் அகாடி கூட்டணி அரசாங்கத்தின் வீழ்ச்சிக்கு மகாராஷ்டிரா காங்கிரஸ் தலைவர் நானா படோல்தான் காரணம் என்று சிவ சேனா  (உத்தவ் பாலாசாகேப் தாக்கரே)  குற்றம் சாட்டியுள்ளது. 


சிவ சேனாவின்  (உத்தவ் பாலாசாகேப் தாக்கரே) அரசியல் ஊதுகுழலான சாம்னா பத்திரிகையில், மகாராஷ்டிராவில் சிவ சேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் மகா விகாஸ் அகாடி கூட்டணி அரசாங்கத்தின் வீழ்ச்சிக்கு மகாராஷ்டிரா காங்கிரஸ் தலைவர் நானா படோல்தான் காரணம் என்று குற்றம் சாட்டியுள்ளது. சாம்னா பத்திரிகையில் கூறப்பட்டுள்ளதாவது: விதான் சபாவின் சபாநாயகர் பதவியில் இருந்து நானா படோல் அவசரமாக ராஜினாமா செய்ததால் மகா விகாஸ் அகாடி அரசாங்கத்தின் சரிவு ஏற்பட்டது. 

மத்திய பிரதேசம், கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சியை கவிழ்க்க பெகாசஸை மத்திய அரசு பயன்படுத்தியது.. நானா படோல் பகீர் குற்றச்சாட்டு

புதிய சபாநாயகரை நியமிக்க கவர்னர் மறுத்து விட்டார், இது மகா விகாஸ் அகாடி அரசாங்கத்துக்கு பாதகமாக இருந்தது. ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தின் வெற்றிக்கு பிறகு, காங்கிரஸ் பல மாநிலங்களில் மறுமலர்ச்சியை காண்கிறது. ஆனால் இன்று மகாராஷ்டிரா காங்கிரஸில் (நானா படோல்-பாலாசாகேப் தோரட் மோதல்) நடப்பது அதற்கு நேர்மாறானது. அது அந்த கட்சிக்கே பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். 

ராகுல் காந்தி

நாடாளுமன்றத்தில் அதானி விவகாரம் தொடர்பாக ராகுல் காந்தி கடுமையாக பேசி பிரதமர் மோடிக்கு சவால் விடுத்துள்ளார். சில சமயங்களில், சர்ச்சை வெடிக்காமல் இருக்க, தங்கள் கட்சித் தலைவர்கள் தங்கள் கருத்து வேறுபாடுகளை புதைக்க வேண்டியது அவசியம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா காங்கிரஸ் சட்டப்பேரவை கட்சி தலைவர் பாலாசாஹேப் தோரட் நேற்று முன்தினம் தனது பதவியை ராஜினாமா செய்தார்.  அதற்கு ஒரு நாள்  முன்புதான் மகாராஷ்டிரா காங்கிரஸ் தலைவர் நானா படோலுடன் இணைந்து பணியாற்ற முடியாது என்று காங்கிரஸின் தேசிய தலைவர் மல்லிகாா்ஜூன் கார்கேவுக்கு பாலாசாஹேப் தோரட் கடிதம் எழுதியிருந்தார்.