ஐக்கிய முற்போக்கு கூட்டணி போன்ற ஒரு கூட்டணியை அமைப்பது பா.ஜ.க.வை தான் பலப்படுத்தும்... சிவ சேனா

 
சிவ சேனா

ஐக்கிய முற்போக்கு கூட்டணி போன்ற ஒரு கூட்டணியை அமைப்பது பா.ஜ.க.வை தான் பலப்படுத்தும் என்று சிவ சேனா தெரிவித்துள்ளது.

மம்தா பானர்ஜி கடந்த சில தினங்களுக்கு முன் மும்பையில் பேசுகையில், ஐக்கிய முற்போக்கு கூட்டணி இப்போது இல்லை, அனைத்து பிராந்திய கட்சிகளும் ஒன்றிணைந்தால் பா.ஜ.க.வை எளிதாக தோற்கடித்து விடலாம் என்று காங்கிரஸை மறைமுகமாக தாக்கினார். மேலும், தேர்தல் வியூக நிபுணரான பிரசாந்த் கிஷோர், காங்கிரஸ் பிரநிதித்துவப்படுத்தும் சிந்தனை மற்றும் ஸ்பேஸ் ஒரு வலுவான எதிர்க்கட்சிக்கு இன்றியமையாதது. ஆனால் காங்கிரஸின் தலைமை என்பது ஒரு தனிநபரின் தெய்வீக உரிமை அல்ல என்று தெரிவித்து இருந்தார். இந்நிலையில், காங்கிரசுக்கு ஆதரவாக சிவ சேனா குரல் கொடுத்துள்ளது. 

மம்தா பானர்ஜி

சிவ சேனாவின் ஊதுகுழலான சாம்னா பத்திரிகையில் கூறப்பட்டுள்ளதாவது: காங்கிரஸ் இன்னும் பல மாநிலங்களில் ஆட்சியில் உள்ளது. கோவா மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் காங்கிரஸ் தலைவர்கள் திரிணாமுல் காங்கிரசில் இணைந்துள்ளனர், ஆம் ஆத்மி கட்சியிலும் இணைந்துள்ளனர் அதுவே உண்மை. ஐக்கிய முற்போக்கு கூட்டணி போன்ற ஒரு கூட்டணியை அமைப்பது பா.ஜ.க.வை தான் பலப்படுத்தும். காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் முன்னிலை வகித்து ஐக்கிய முற்போக்கு கூட்டணியை வலுப்படுத்த முன்வர  வேண்டும். 

பா.ஜ.க.

பிரியங்கா காந்தி லக்கிம்பூர் கெரிக்கு செல்லாமல் இருந்திருந்தால் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டிருக்கும். அவர் எதிர்க்கட்சி தலைவராக தனது பங்கை ஆற்றினார். ஐக்கிய முற்போக்கு கூட்டணியை வழிநடத்தும் (தலைமை) தெய்வீக சக்தி யாருக்கு உள்ளது என்பது இரண்டாம்பட்சம், முதலில் நாம் மக்களுக்கு ஒரு வாய்ப்பை வழங்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.