மகாராஷ்டிராவில் 3 மாதங்களில் ஆட்சி அமைப்போம் – பா.ஜ.க…. வாய்ப்பு இல்லை ராசா… சிவ சேனா பதிலடி

மகாராஷ்டிராவில் 3 மாதங்களில் ஆட்சி அமைப்போம் – பா.ஜ.க…. வாய்ப்பு இல்லை ராசா… சிவ சேனா பதிலடி

மகாராஷ்டிராவில் அடுத்த 3 மாதங்களுக்குள் ஆட்சி அமைப்போம் என்று பா.ஜ.க.வின் மத்திய அமைச்சர் ஒருவர் தெரிவித்தார். ஆனால் உத்தவ் தாக்கரே அரசு தனது ஆட்சி காலத்தை நிறைவு செய்யும் என்று சிவ சேனா பதிலடி கொடுத்துள்ளது.

மகாராஷ்டிராவில் பர்பானி மாவட்டத்தில் நடைபெற்ற பா.ஜ.க. கட்சி கூட்டத்தில் மத்திய அமைச்சர் ராவ்சாகேப் டான்வே கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், எங்களது அரசாங்கம் அமையாது என்று நினைக்க வேண்டாம். இது 2 முதல் 3 மாதங்களில் அமையும். மாநில மேலவை உறுப்பினர் தேர்தல் முடிவடைவதற்காக காத்திருக்கிறோம் என்று தெரிவித்தார்.

மகாராஷ்டிராவில் 3 மாதங்களில் ஆட்சி அமைப்போம் – பா.ஜ.க…. வாய்ப்பு இல்லை ராசா… சிவ சேனா பதிலடி
பா.ஜ.க.

மத்திய அமைச்சர் ராவ்சாகேப் டான்வே கருத்து குறித்து சிவ சேனாவின் மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய் ரவுத்திடம் செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு சஞ்சய் ரவுத் கூறியதாவது: இன்று (நேற்று) கடந்த ஆண்டு அமைந்த 3 நாள் அரசாங்கத்தின் முதலாம் ஆண்டு நினைவுதினம். எங்களது அரசாங்கம் 4 ஆண்டுகள் முழுமையாக ஆட்சி செய்யும்.

மகாராஷ்டிராவில் 3 மாதங்களில் ஆட்சி அமைப்போம் – பா.ஜ.க…. வாய்ப்பு இல்லை ராசா… சிவ சேனா பதிலடி
ராவ்சாகேப் டான்வே

அவர்களின் அனைத்து முயற்சிகளும் தோல்வி அடைந்த விரக்தியில் இது போன்று எதிர்க்கட்சி தலைவர் பேசுகிறார். மகாராஷ்டிரா மக்கள் அனைவரும் இந்த அரசாங்கத்துடன் இருக்கிறார்கள் என்பது அவர்களுக்கு நன்றாக தெரியும். இவ்வாறு அவர் தெரிவித்தார். 2109 நவம்பர் 23ம் தேதியன்று தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் அஜித் பவாரும் மகாராஷ்டிராவின் முதல்வர் மற்றும் துணை முதல்வராக பொறுப்பேற்றனர். பா.ஜ.க. மீண்டும் ஆட்சி அமைத்தது. ஆனால் அந்த அரசாங்கம் 80 மணி நேரத்தில் முடிவுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.