நமது நாட்டில் ஒற்றுமையை பா.ஜ.க. விரும்பவில்லை.. 28 வருடங்களுக்கு முன்னரே சரத் பவார் சொன்னார்.. சிவ சேனா

 
சரத் பவார்

நமது நாட்டில் ஒற்றுமையை பா.ஜ.க. விரும்பவில்லை என்று 28 வருடங்களுக்கு முன்பு சரத் பவார் சொன்னதை 2 ஆண்டுகளுக்கு முன் நாங்கள் உணர்ந்தோம் என்று சிவ சேனா எம்.பி. சஞ்சய் ரவுத் தெரிவித்தார்.


தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவரும், நாட்டின் மூத்த அரசியல்வாதியுமான சரத் பவார், பல்வேறு அரசியல் பேரணிகளில் மராத்தி மொழியில் ஆற்றிய உரைகளின் தொகுப்பை நெம்கேக்சி போலனே என்ற தலைப்பில் புத்தகம் உருவாக்கப்பட்டுள்ளது. மும்பையில் நேரு சென்டரில் இந்த புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் சிவ சேனாவின மூத்த தலைவர்களில் ஒருவரான சஞ்சய் ரவுத் கலந்து கொண்டார்.

சஞ்சய் ரவுத்

அந்த விழாவில் சஞ்சய் ரவுத் பேசுகையில் கூறியதாவது: இந்த புத்தகத்தின் தலைப்பின் பொருள் சுருக்கமாக பேசுவதாகும். நமது நாட்டில் ஒற்றுமையை பா.ஜ.க. விரும்பவில்லை என்று 1992ல் சரத் பவார் சாகேப் கூறினார். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்புதான் நாங்கள் உணர்ந்தோம். நீண்டகாலமாக சரத் பவார் சாகேப் பா.ஜ.க. நம்மை பிரிக்கிறது என்று எங்களிடம் கூறி வருகிறார். 

பா.ஜ.க.

1996ல் சரத் பவார் சாகேப், பா.ஜ.க. நாட்டை பின்னோக்கி எடுத்து செல்கிறது என்று கூறியிருந்தார். இப்போது அதையும் உணர்ந்துள்ளோம். பா.ஜ.க. நம் நாட்டை மீண்டும் பின்னோக்கி கொண்டு செல்கிறது. இந்த புத்தகத்தை பிரதமர் நரேந்திர மோடிக்கு பரிசாக வழங்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.