இன்று காங்கிரஸ் தலைவர் தேர்தல்.. மல்லிகார்ஜூன் கார்கே வெற்றி பெற்றாலும் நாங்கள் சேர்ந்து பணியாற்றுவோம்.. சசி தரூர்

 
சசி தரூர்

காங்கிரஸ் தலைவர் தேர்தலில் மல்லிகார்ஜூன் கார்கே வெற்றி பெற்றாலும் நாங்கள் இயற்கையாகவே சேர்ந்து பணியாற்றுவோம் என காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரான சசி தரூர் தெரிவித்தார்.

காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இன்று நடைபெறுகிறது. இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களான சசி தரூர் மற்றும் மல்லிகார்ஜூன் கார்கே ஆகியோர் போட்டியிடுகின்றனர். கடந்த சில தினங்களாக சசி தரூர் மற்றும் மல்லிகார்ஜூன் கார்கே ஆகியோர் பல மாநிலங்களுக்கு சென்று தலைவர் தேர்தலில் வாக்களிக்கும் காங்கிரஸ் பிரதிநிதிகளை சந்தித்து ஆதரவு திரட்டினர்.

வரணும்… காங்கிரஸ் தலைவரா மீண்டும் ராகுல் காந்தி வரணும்… அசோக் கெலாட் கோரிக்கை

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், ராஜஸ்தான் முதல்வருமான அசோக் கெலாட் காங்கிரஸ் தலைவர் தேர்தலில் மல்லிகார்ஜூன் கார்கேவுக்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவித்தார். மேலும் பல காங்கிரஸ் மூத்த  தலைவர்களும் கார்கேவுக்கு ஆதரவாக இருந்தனர். அதேசமயம் சசி தரூர் தனியாக பிரச்சாரம் செய்தார். காங்கிரஸ் தலைவர் தேர்தலில் மல்லிகார்ஜூன் கார்கே தான் வெற்றி பெறுவார் என கூறப்படுகிறது. இந்த சூழ்நிலையில், காங்கிரஸ் தலைவர் தேர்தலில் கார்கே வெற்றி பெற்றாலும் நாங்கள் ஒத்துழைப்புடன் வேலை செய்வோம் என சசி தரூர் தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சிகளை பேச மத்திய அரசு அனுமதிக்கவில்லை..குரல் இல்லையென்றால் எப்படி பேச முடியும்?.. மல்லிகார்ஜூன் கார்கே

காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிடும் போட்டியாளர்களில் ஒருவரான சசி தரூர் கூறியதாவது: காங்கிரஸ் கட்சியின் சித்தாந்தத்தில் எந்த பிரச்சினையும் இல்லை,  ஆனால் எங்கள் வேலை முறையில் மாற்றத்தை கொண்டு வர விரும்புகிறேன். எனது இணை போட்டியாளர் மல்லிகார்ஜூன் கார்கே ஒரு அனுபவம் வாய்ந்தவர், அவர் வெற்றி பெற்றால், நாங்கள் இயற்கையாகவே ஒத்துழைப்புடன் பணியாற்றுவோம். இவ்வாறு அவர்  தெரிவித்தார். வரும் புதன்கிழமை காங்கிரஸ் தலைவர் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். எனவே அன்றைய தினமே காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவர் யார் என்பது தெரிந்து விடும்.