மோடி முதல்வராக இருந்தபோது அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க நானும், மன்மோகன் சிங்கும் எதிர்த்தோம்.. சரத் பவார்

 
ராமர் கோயில் போல் அயோத்தியில் மசூதி கட்டவும் அறக்கட்டளை அமைக்க வேண்டும்….. சரத் பவார்

குஜராத் முதல்வராக நரேந்திர மோடி இருந்தபோது, அவருக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதை நானும், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கும் எதிர்த்தோம் என்பது ஒரளவு உண்மை என்று சரத் பவார் தெரிவித்தார்.

மகாராஷ்டிராவின் புனேவில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் சரத் பவார் கலந்து கொண்டார். அந்த விழாவில் சரத் பவார் தனது கடந்த மற்றும் நிகழ்கால சம்பவங்கள் குறித்து மனம் திறந்து பேசினார். சரத் பவார் கூறியதாவது: காங்கிரஸை விட்டு வெளியேறியபோது, மகாத்மா காந்தி மற்றும் ஜவஹர்லால் நேருவின் சித்தாந்தத்தை ஒருபோதும் தூக்கி எறியவில்லை. 1991ல் மகாராஷ்டிராவிற்கு முதல்வராக திரும்ப விரும்பவில்லை, இருப்பினும் அந்த  சவாலை ஏற்றுக்கொண்டேன்.

காங்கிரஸ்

சபாநாயகர் தேர்தல் குறித்து முதல்வரிடம் (உத்தவ் தாக்கரே) நான் பேசியதாகவும், அதன் பிறகு அந்த தேர்தல் ரத்து செய்யப்பட்டது என்று இன்று அனைத்து நாளிதழ்களிலும் செய்தி வெளியானது. ஆனால் நான் அதை பற்றி எதுவும் பேசவில்லை. மாநிலத்தில் அரசியல் முன்னணியில் நடக்கும் எல்லாவற்றிலும் என் கையை சந்தேகிக்கும் போக்கை  செய்தித்தாள்கள் கொண்டிருக்கின்றன. சிவ சேனா நிறுவனர் மறைந்த பால் தாக்கரே  எனக்கு எதிராக தேர்ந்த வார்த்தைகளை பயன்படுத்த தயங்கியதில்லை. ஆனால் நாங்கள் எப்போதும் நண்பர்களாக இருந்தோம். ஒத்துழைத்தோம் மற்றும் மாநிலத்தை பாதிக்கும் பிரச்சினைகளை அடிக்கடி விவாதித்தோம்.

பிரதமர் மோடி

குஜராத் முதல்வராக நரேந்திர மோடி இருந்தபோது, அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க எனது அமைச்சரவை சாகாக்கள் விரும்பினர். ஆனால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வருக்கு எதிராக பழிவாங்கும் நடவடிக்கை எடுப்பதை நானும், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கும் எதிர்த்தோம் என்பது ஒரளவு உண்மை. பிரதமர் நரேந்திர மோடி அதிக கடின உழைப்பை மேற்கொண்டு தான் எடுக்கும் பணியை தர்க்கரீதியான முடிவுக்கு கொண்டு வருகிறார். 2019ம் ஆண்டில் மகாராஷ்டிராவில் ஒன்றாக செயல்பட பிரதமர் மோடி பரிந்துரை செய்தார். ஆனால் அது சாத்தியமில்லை என்று நான் அவருடைய அலுவலகத்தில் சொன்னேன்.

உத்தவ் தாக்கரே

மகாராஷ்டிராவில் உள்ள மகா விகாஸ் அகாடி அரசாங்கத்தின் ஸ்திரத்தன்மை குறித்து எனக்கு கவலை இல்லை. தற்போது மாநில முதல்வரும், சிவ சேனா தலைவருமான உத்தவ் தாக்கரேவின் உடல் நிலை குறித்து நான் கவலைப்பட்டேன். ஆனால் கடந்த 10 நாட்களாக அவர் அனைத்து முடிவுகளையும் எடுப்பதாக தெரிகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.