கடும் குளிர்…கனிமொழி வேதனை

 

கடும் குளிர்…கனிமொழி வேதனை

புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி பஞ்சாப், ஹரியானா, உத்திரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் கடந்த நவம்பர் மாதம் முதல் டெல்லி எல்லைகளை முற்றுகைப் போராட்டம் நடத்தி வருகின்றனர். பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் பத்துக்கும் மேற்பட்ட முறை மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தியும் எந்த தீர்வும் எட்டவில்லை.

கடும் குளிர்…கனிமொழி வேதனை

3 புதிய வேளாண் சட்டங்களையும் மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்பதில் விவசாயிகள் உறுதியாக உள்ளனர். இந்த நிலையில் தங்களது போராட்டத்தை டெல்லி ஜந்தர் மந்தருக்கு மாற்றி விவசாயிகள் போராடி வருகின்றனர்.

இன்று முதல் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் விவசாயிகள் போராட்டம் தொடங்கி இருக்கிறது. விவசாயிகள் முட்டாள் அல்ல என்று அரசாங்கத்திற்கு நிரூபிப்பதற்காக ஜந்தர்மந்தரில் வந்துள்ளோம் என்று தெரிவித்துள்ள விவசாயி சங்கத் தலைவர்கள், ‘ விவசாயி நாடாளுமன்றம்’ நிகழ்ச்சியை நாள் தோறும் நடத்த முடிவு செய்துள்ளனர்.

கடும் குளிர்…கனிமொழி வேதனை

ஜந்தர் மந்தரில் விவசாயிகள் கூடிக்கொண்டே இருப்பதால் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருக்கிறது. நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் நடந்து வருகிறது . கவனத்தை ஈர்ப்பதற்காக நாடாளுமன்றத்திற்கு வெளியே போராட்டம் நடத்த முடிவு விவசாயிகள் முடிவு செய்து இன்று முதல் போராட்டத்தில் தொடங்கியிருக்கிறார்கள். ஜந்தர் மந்தரில் இருந்து நாடாளுமன்றத்திற்கு சில 100 மீட்டர் தூரம் தான் என்பதால் டெல்லியில் பரபரப்பும் பதற்றமும் ஏற்பட்டுள்ளது.

இந்த போராட்டம் குறித்து கனிமொழி எம்.பி., ‘’12 மாதங்களாக கொரோனா‌ காலத்திலும் நாடு முழுவதும் நமது விவசாயிகள் புதிய‌ வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடி வருகின்றனர். மக்களுக்கு நன்மையளிப்பவை மட்டுமே சட்டம் மற்றவை உத்தரவு. அரசு பேச்சுவார்த்தைக்குத் தயார்‌ என்றாலும் சட்டத்தை திரும்பப்பெற மறுக்கிறது. கடும் குளிரிலும் மழையிலும் விவசாயிகள் அல்லல்படுவதை காண்பது வேதனையளிக்கிறது. வேளாண் சட்டங்களை திரும்பப்பெறுக’’என்று தெரிவித்திருக்கிறது.