அம்மனை தூக்க செந்தில்பாலாஜி போடும் ப்ளான்!
ஒரு காலத்தில் கோவை மண்டலம் என்பது திமுகவுக்கு ஆகாத மண்டலமாக இருந்தது. இன்று அப்படியே தலைகீழாக மாறி இருக்கிறது. இந்த தலைகீழ் மாற்றத்திற்கு காரணம் அமைச்சர் செந்தில் பாலாஜி.
என்னதான் திமுக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தாலும் கூட கோவை மண்டலத்தில் பெரும் தோல்வியை சந்தித்தது திமுக. இதை அடுத்து கோவை மண்டலத்தின் சரிவை சரி கட்டுவதற்கு கோவை மண்டலத்தை திமுகவின் மண்டலமாக மாற்றுவதற்கு யார் சரியான ஆள் என்பது குறித்து ஆலோசித்து அந்த பொறுப்பை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு வழங்கினார் முதல்வர் ஸ்டாலின்.
திமுகவின் கோவை மண்டல தளபதியாக உருவெடுத்த அமைச்சர் செந்தில் பாலாஜி, அதிரடியான திட்டங்களால் முதல்வரையே அசரவைத்து வருகிறார். உள்ளாட்சி தேர்தலில் திமுகவுக்கு அதிகபட்ச வெற்றியைத் தேடி கொடுத்திருக்கிறார். ஸ்டாலின்,
உதயநிதி ஸ்டாலின் கோவைக்கு செல்லும் போதெல்லாம் வரவேற்பில் அவர்களை நெகிழ வைத்து விடுகிறார். அடுத்த அதிரடியாக முதல்வர் ஸ்டாலின் கோவை செல்லும் போது அதிமுக எம்எல்ஏ ஒருவரை அரசுக்கு ஆதரவாக பேச வைத்து, அதிமுகவில் சலசலப்பு ஏற்படுத்தி , பின்னர் அவரை திமுக பக்கம் இழுத்து விட்டால் இன்னும் அதிரடியாக இருக்கும் என்று அதற்கான திட்டம் போட்டு இருக்கிறாராம் செந்தில் பாலாஜி.
இதற்காக அவர் குறி வைத்திருக்கும் நபர் தான் அம்மன் அர்ஜுனன். கோவை வடக்கு தொகுதியின் அதிமுக எம்எல்ஏவாக இருக்கும் அம்மன் அர்ஜுனன், எஸ் பி வேலுமணிக்கு தீவிர விசுவாசி. கடந்த முறை கோவை தெற்கு தொகுதியில் அதாவது 2016 ஆம் ஆண்டு தேர்தலில் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்டு வென்று அத்தகுதியின் எம்எல்ஏவாக இருந்தவர். இந்த முறை அந்த தொகுதியை கூட்டணி கட்சியான பாஜக கேட்க பாஜகவுக்கு அதிமுக விட்டு கொடுத்தது .
அத்தகுதியில் நின்ற வானத்தி சீனிவாசன் வென்றிருக்கிறார். இதை அடுத்து கோவை வடக்கு தொகுதியில் நின்று வெற்றி பெற்றிருக்கிறார்அம்மன் அர்ஜுனன். கோவையில் அதிமுக ஆட்சியின் போது அசைக்க முடியாத சக்தியாக இருந்தவர் எஸ். பி. வேலுமணி . செந்தில் பாலாஜியின் வருகைக்கு பிறகு எஸ்பி வேலுமணியின் செல்வாக்கு அங்கு கொஞ்சம் குறைந்து வருகிறது .
இதை மேலும் குறைத்து வேலுமணிக்கு அதிர்ச்சி வைத்தியம் எடுக்க வேண்டும் என்பது தான் அவரின் தீவிர விசுவாசியான அம்மன் அர்ஜுனனை திமுக பக்கம் இருக்க பிளான் போட்டு வருகிறாராம் செந்தில் பாலாஜி எதையும் செய்யக்கூடிய சாதிக்கக் கூடியவர் செந்தில் பாலாஜி என்கிறார்கள் அப்படி என்றால் அம்மன் அர்ஜுனன் அதிமுகவிலிருந்து திமுகவுக்கு தாவி விடுவாரா என்ற சலசலப்பு எழுந்திருக்கிறது .