செந்தில்பாலாஜி-அண்ணாமலை! உள்ளே -வெளியே ஆட்டம்?

 
sஅ

சாராய அமைச்சர் என்று செந்தில் பாலாஜியை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை.   அதே மாதிரி,  அண்ணாமலை ஒரு கோமாளி.  ஆட்டுக்குட்டி அண்ணாமலை என்று கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்  அமைச்சர் செந்தில் பாலாஜி. 

 அண்ணாமலை -செந்தில் பாலாஜி இருவரும் ஒருவரை ஒருவர் தொடர்ந்து கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்கள்.  ஆனால் செந்தில் பாலாஜியிடம் அண்ணாமலை பேரம் பேசுகிறார் என்ற பகீர் குற்றச்சாட்டை முன் வைத்திருக்கிறார் பாஜகவில் இருந்து வெளியேறிய நிர்மல் குமார்.

னி

 தமிழக பாஜகவின் ஐடி பிரிவு தலைவராக இருந்த  நிர்மல் குமார்,  அப்பதவி மற்றும் பாஜகவின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகி அதிமுகவில் இணைந்துவிட்டார்.  அவர்  தமிழக பாஜகவின் ஐடி பிரிவு தலைவராக இருந்தபோது,   டாஸ்மாக் மதுபான விற்பனை கொள்முதல் உள்ளிட்டவை குறித்து அமைச்சர் செந்தில் பாலாஜி மீது குற்றம் சுமத்தி  நிர்மல் குமார் டுவிட்டர் தளத்தில் பதிவிட்டிருந்தார்.   இது தொடர்பாக நேர்காணலும் அளித்திருந்தார் . இதை அடுத்து தன் மீது அவதூறு கருத்துக்களை தெரிவிக்க நிர்மல் குமாருக்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறி அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

 இந்த மனுவை விசாரித்த நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி நடத்திய விசாரணையில் அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜர் ஆன வழக்கறிஞர் எந்த ஆதாரமும் இல்லாமல் அவதூறு பரப்பப்பட்டுள்ளதாகவும் தன்னை பற்றி அவதூறு கருத்துக்களை நீக்கி விட்டால் இந்த வழக்கை வாபஸ் பெற தயாராக இருப்பதாகவும் கூறப்பட்டது. 

ன்க்

 இதற்கு பதில் அளித்த நிர்மல் குமார் தரப்பு வழக்கறிஞர்,  முகாந்திரத்தின் அடிப்படையிலேயே வலைத்தளங்களில் பதிவிட்டதாக தெரிவிக்கப்பட்டது.   அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த பின்னர்,   எழுத்துப்பூர்வமான வாதங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கின் தீர்ப்பை நீதிபதி ஒத்தி வைத்தார். அப்போது நிர்மல் குமார் தரப்பில் நீதிமன்ற உத்தரவுக்கு பிறகும் செந்தில் பாலாஜி குறித்து மூன்று பதிவுகள் பதிவிட்டதற்காக மன்னிப்பு கோருவதாக தெரிவிக்கப்பட்டது.  மேலும்,  அந்த பதிவுகள் நீக்கப்பட்டு விட்டது என்றும் மனுத்தாக்கல் செய்யப்பட்டது .  ஆனாலும் செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் இந்த மன்னிப்பு விவகாரத்தை நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தான் கருத்தில் கொள்ள வேண்டும் என்று திட்டவட்டமாக கூறப்பட்டுள்ளது.

இது தொடர்பான வழக்கு விசாரணை நடந்து கொண்டிருக்கிறது.  இந்த நிலையில், அவர் பாஜகவில் இருந்து வெளியேறி இருக்கிறார்.  அதற்கு காரணமாக அவர் விடுத்திருக்கும் அறிக்கையில்,  ‘’தமிழக பாஜக தலைமை தொண்டர்களையும் கட்சியையும் செருப்பாக பயன்படுத்தி கட்சியை பற்றி துளியும் சிந்திக்காது சொந்தக் கட்சி நிர்வாகிகளையும் தொண்டர்களையும் வேவு பார்த்து ஆனந்தம் அடைவதை போன்ற அலுப்பத்தனம் எதுவும் இல்லை.  அதையும் தாண்டி தன்னை நம்பி இருக்கும் தொண்டர்கள்,  கட்சி மற்றும் கமலாலயத்தின் ஒவ்வொரு செங்கல்லையும் வியாபாரம் ஆக்கி இடத்திற்கு ஏற்ப நடித்து ஏமாற்றி வரும் தலைமையை பார்த்து ஒவ்வொரு நாளும் வேதனை அடைந்தது தான் மிச்சம்.  தொண்டர்களை மதிக்காது தான்தோன்றித்தனம் இவற்றுடன் மனநலம் குன்றிய மனிதரைப் போல் செயல்படும் நபரால் கட்சி அழிவை நோக்கி செல்வதை ஒவ்வொரு நாளும் பார்க்க முடிகிறது. 

ச்

 2019 இல் இருந்த கட்சி அமைப்பில் தற்போது 20% கூட இல்லை.  அதை பற்றி துளியும் கவலை இல்லாமல் மாய உலகத்தில் சுற்றி வரும் ஒரு நபரால் கலை யதார்த்தத்தை என்றும் உணர முடியாது.  அதை உணர்த்த முயன்று என்னைப் போல பலர் தோல்வியடைந்து எல்லாவற்றுக்கும் மேலாக நான் ஒரு அமைச்சருடன் கடுமையான சட்டப் போராட்டம் நடத்தி வரும் நிலையில் , அந்த அமைச்சரை வெளியில் வீரா வேசமாக பேசிவிட்டு திரை மறைவில் பேரம் பேசும் நபருடன் எப்படி பயணிக்க முடியும்? மொத்தத்தில் திராவிட மாடல் அமைச்சர்களையே மிஞ்சும் அளவிற்கு ஒரு #420 மலையாக இருக்கும் நபர் தமிழக பாஜகவிற்கு மட்டுமல்ல தமிழகத்திற்கும் மிகப்பெரிய கேடு.  தன்னை நம்பி இருக்கும் தொண்டர்கள் மற்றும் கட்சியை ஏமாற்ற நினைக்கும் ஒரு தலைமையை நம்பி எப்படி பயணிக்க முடியும்?’’ என்று கேட்டிருக்கிறா