திமுகவை ரிஜெக்ட் செய்த செங்கோட்டையன்! தவெகவில் இணைவதில் உறுதி

 
அ அ

அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். சென்னை தலைமை செயலகத்தில் சபாநாயகர் அப்பாவுவை சந்தித்து ராஜினாமா கடிதத்தை நேரில் வழங்கினார்.

Image

அதிமுகவுக்குள் அணியாக செயல்படாமல் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என தனது கோரிக்கையை மனம் திறந்து முன் வைத்தார் செங்கோட்டையன். அதோடு ஒன்றிணைய வேண்டும் என்பதற்கு காலக்கெடு கெடு விதித்திருந்தார் செங்கோட்டையன். அதனை தொடர்ந்து எடப்பாடி செங்கோட்டையனை கட்சி பொறுப்புகளில் இருந்து நீக்கினார். அதன் பிறகு இராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் நடைபெற்ற தேவர் குரு பூஜை நிகழ்ச்சியில் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் டிடிவி தினகரன் ஆகியோர் ஒன்றாகக் கலந்துகொண்டனர்.

இதனைத்தொடர்ந்து செங்கோட்டையனை அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து எடப்பாடி பழனிசாமி நீக்கினார். அதிமுகவில் இருந்து எடப்பாடியால் நீக்கப்பட்ட செங்கோட்டையன் தவெகவில் இணைய இருக்கிறார் என்று தகவல் வெளியானது. இந்த நிலையில் செங்கோட்டையன் தலைமை செயலகத்திற்கு வருகை தந்து சபாநாயகர் அப்பாவுவிடம் ராஜினாமா கடிதத்தை வழங்கி எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார். ஒரு கட்சியில் சட்டமன்ற உறுப்பினராக உள்ளவர் ஏற்கனவே இருக்கும் கட்சிக்கு மாறிச் சென்றால் கட்சித் தாவல் தடை சட்டம் பாயும் என்ற அடிப்படையில் ராஜினாமா செய்துள்ளார். அதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்திக்காமல் அதிமுக கொடி பொறுத்திய காரில் செங்கோட்டையன் கூறப்பட்டு சென்றார். செங்கோட்டையனை சேகர்பாபு தொடங்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரை திமுகவிற்கு அழைத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால்தவெகவில் இணைவதில் தற்போது வரை செங்கோட்டையன் உறுதியாக இருக்கிறார்.