தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் என்றீர்; இப்போது தர்மம் வென்றிருக்கிறது - செங்கோட்டையன்

 
sengottaiyan

தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் என்று குறிப்பிட்டார்கள், தற்போது தர்மம் வென்று  இருக்கிறது என செங்கோட்டையன் ஓ.பன்னீர் செல்வத்துக்கு பதில் அளித்துள்ளார்.

Small schools won't become libraries: KA Sengottaiyan- The New Indian  Express

அதிமுக பொதுக்குழு கூட்டம் நடத்த தடையில்லை என சென்னை உயர்நீதிமன்றத்தில் தீர்ப்பு வெளியான பிறகு சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள எடப்பாடி இல்லத்தில் இருந்து வெளிவந்த முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், பொள்ளாச்சி ஜெயராமன், விஜயபாஸ்கர், ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது பேசிய செங்கோட்டையன், “தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் என்று குறிப்பிட்டார்கள், தற்போது தர்மம் வென்று  இருக்கிறது. பொதுக்குழுவுக்கு தான் முடிவு செய்யும் அதிகாரம் இருக்கிறது. ஆகவே பொதுக்குழுவின் தீர்மானங்கள் சிறப்பான முறையில் நிறைவேற்றப்படும். எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்கு பிறகு மீண்டும் அதிமுக வருகின்ற தேர்தலில் அனைத்து இடங்களிலும் வெற்றி பெறும்” என்று தெரிவித்தார்.