"பாஜக ஒரு வளராத கட்சி" - கல்வெட்டு சர்ச்சைக்கு செல்லூர் ராஜு பதிலடி!

 
செல்லூர் ராஜு

தமிழ்நாட்டில் திமுக அரசு பொறுப்பேற்றுக் கொண்டதிலிருந்து நாங்கள் தான் பிரதான எதிர்க்கட்சி என பாஜக தலைவர் அண்ணாமலை கூறி வருகிறார். அரசை எதிர்த்து போராட்டம் நடத்துவதும், அமைச்சர்களை தேவையில்லாமல் சீண்டுவதும் தான் எதிர்க்கட்சியா என திமுகவினர் கேள்வியெழுப்பினர். திமுக அரசு மீது குறை சொல்லியே தீர வேண்டுமென்பதாலும், அதிமுகவை ஓரங்கட்டவும் இப்படி பேசி வருகிறார் என ஒருசில அதிமுக அனுதாபிகளே முணுமுணுத்தனர். 

பெற்ற தாயும் இல்லை, வளர்த்த தாயும் இல்லை” - பிரசாரத்தில் உருகும் செல்லூர்  ராஜூ| Sellur raju election campaign in madurai

இச்சூழலில் திருப்பூரில் புதிதாக திறக்கப்பட்ட பாஜக அலுவலகத்தில் நயினார் நாகேந்திரன் எதிர்க்கட்சித் தலைவர் என வைக்கப்பட்டுள்ள கல்வெட்டால் புது சர்ச்சை வெடித்துள்ளது. புதிய கட்டட அலுவலகத்தில் பதிப்பதற்காக கொண்டு வந்திருந்த கல்வெட்டில் நயினார் நாகேந்திரன் பெயருக்கு கீழ் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் என பொறிக்கப்பட்டிருக்கிறது. ஆளுங்கட்சிக்கு அடுத்தப்படியாக எந்தக் கட்சி அதிக இடங்களில் வெல்கிறோ அக்கட்சி தேர்ந்தெடுப்பவரே எதிர்க்கட்சித் தலைவர். 

கல்வெட்டு

அந்த வகையில் அதிமுக எம்எல்ஏ எடப்பாடி தான் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர். ஆனால் பாஜகவின் கல்வெட்டில் நயினார் நாகேந்திரன் பெயர் பொறிக்கப்பட்டுள்ளது. அவர் பாஜக சட்டப்பேரவை தலைவர் தானே தவிர, எதிர்க்கட்சித் தலைவராகக் கருதப்படமாட்டார். இதுதொடர்பாக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறுகையில், "தமிழ்நாட்டில் பாஜக வளராத கட்சி. ஆனால் அதிமுக வளர்ந்த கட்சி. பாஜக வளரும் கட்சி என்பதால் அவர்கள் இதுபோன்று போட்டுக்கொள்கிறார்கள். ஆனால் மக்களின் பேராதரவுடன் அதிமுக தான் எதிர்க்கட்சியாக உள்ளது” என்றார்.