திமுக தொடர்ந்து ஆட்சிக்கு வந்த வரலாறு இல்லை - செல்லூர் ராஜூ

 
 sellur raju

அம்மாவை மறக்காதவர்கள் மதுரை மக்கள் என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

``அதிமுக-வுடன் கூட்டணி வைத்தால்தான் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக வெற்றி பெறும்!" - செல்லூர் ராஜு

மதுரை கோரிப்பாளையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, “திமுக ஆட்சிக்கு வந்த பிறகு திரும்பவும் ஆட்சிக்கு வந்ததாக சரித்திரம் இல்லை. நாளைக்கே மத்திய அரசு திமுக மக்கள் விரோத ஆட்சியை நடத்துவதாக கூறி ஆட்சியை கலைக்க உத்தரவு போட்டால் அவ்வளவுதான். மக்கள் வெறுத்துப்போயுள்ளனர். விடியலை தருவோம் என வாக்கு வாங்கிவிட்டு, விடியாத அரசாக திமுக அரசு உள்ளது.

அதிமுக ஒன்றுபட்ட இயக்கம், அதிமுகவில் இருந்து ஒரு சிலர் போயிருக்கலாம். அதை பற்றி பொருட்படுத்தவில்லை. தேர்தலை நோக்கி அதிமுக ஆர்ப்பாட்டம், போராட்டம் நடத்தவில்லை, தேர்தல் வரும் போகும். ஆனால் நாங்கள் மக்கள் நலனுக்காகதான் போராடிவருகிறோம்.  போதை, லஞ்சத்தை ஒழிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. திமுக கட்சி அல்ல, கலைஞரின் பிரைவேட் கம்பெனி. கழக குடும்பம் இல்லை. கலைஞர் குடும்பம். உதயநிதி ஸ்டாலின் தற்போதுகூட முதலமைச்சராக தான் இருக்கிறார். அவர் தனியாக அமைச்சராக வேண்டும் என்பது இல்லை. திமுகவில் யாருமே மக்களுக்கு பயப்படமாட்டார்கள். பெண்கள் ஆண்களுக்கு அடிமை இல்லை என்பதுதான் திராவிட இயக்கத்தின் சித்தாந்தம். ஆனால் மாநகரின் முதல் குடிமகன் சென்னை மேயர் முதலமைச்சரின் வாகனத்தின் தொற்றிக்கொண்டு செல்கிறார். இதெல்லாம் பார்த்து மக்கள் காரி துப்புகிறார்கள். இதுவே அரசியல்வாதிகளை மக்கள் வெறுக்க காரணம்" எனக் கூறினார்.