தமிழர்களிடம் சுரண்டிக் கொழுத்து வசதி பெற்ற சீமான் - திமுக கடும் தாக்கு

 
ச்ப்


உழைத்துப் பிழைக்க வரும் அப்பாவி கூலித் தொழிலாளர்கள் நம் கருணைக்கு உரியவர்கள்!  புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களிடம் சுரண்டிக் கொழுத்து வசதி பெற்றுவிட்டு,  புலம்பெயர்ந்து தமிழ்நாட்டுக்கு வரும் தொழிலாளர்களை தமிழினத்தின் எதிரிகளாகவும், அவர்களால் தமிழ்நாட்டுக்கே பேராபத்து என்றும்  சீமான்  பேசுவது கேலிக்கூத்து! என்று  நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகி திமுகவில் இணைந்து அக்கட்சியில் மாநில மாணவரணி தலைவராக இருக்கும் ராஜீவ்காந்தி கூறியிருக்கிறார்.

ர

வடமாநில தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் வந்து சம்பாதித்து செல்வது பற்றி ஒன்றும் இல்லை .  ஆனால் அவர்களுக்கு வாக்குரிமை கொடுத்து வருகிறார்கள்.  இங்கே வரும் அத்தனை வடமாநில தொழிலாளர்களுக்கும் வாக்குரிமை கிடைத்து விட்டால் நாளை அவர்கள் தமிழர்களை தாய் நிலத்திலிருந்து விரட்டியடிப்பார்கள்.  மேலும் அவர்களின் வாக்குகள் பாஜகவிற்கு சாதகமாக அமைந்துவிடும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தொடர்ந்து எச்சரித்து வருகிறார்.

 இந்த நிலையில் வட மாநில தொழிலாளர்கள் தமிழகத்தில் தாக்கப்படுவதாக ஒரு வதந்தி பரவியது.   இதை அடுத்து தமிழகத்தில் உள்ள வட மாநில தொழிலாளர்கள் கும்பல் கும்பலாக சொந்த ஊருக்கு திரும்புகின்றனர் என்று தகவல்.   இதனால் தமிழ்நாட்டில் பல வேலைகள் பாதியில் அப்படியே இருக்கின்றன என்ற குற்றச்சாட்டுகள் எழுந்தன.

முதல்வர் வட மாநில தொழிலாளர்களுக்கு திமுக அரசு பாதுகாப்பாக இருக்கும்.  அச்சம் கொள்ளத் தேவையில்லை.  வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்து இருந்தார்.  


 பீகார் மாநில தொழிலாளர்கள் அதிகம் தமிழ்நாட்டை விட்டு வெளியேறுவதாக வந்த தகவல் அடுத்து பீகார் அரசும் இதில் நடவடிக்கை எடுத்து வருகிறது.  தமிழகத்தில் வேலை செய்யும் வடமாநில தொழிலாளர்கள் பற்றிய வதந்தியை பரப்பிய பீகார் மாநிலத்தில் ஜாமி மாவட்டத்தை சேர்ந்த அமன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.  அவர்தான் திட்டமிட்டு வதந்தி பரப்பி தெரிய வந்திருக்கிறது .  இதை அடுத்து போலி வீடியோக்களை நீக்க டிவிட்டர், யூடியுப் நிறுவனங்களுக்கு பீகார் போலீசார் கடிதம் அனுப்பி உள்ளார்கள்.  

 தமிழகத்தில் வட மாநில தொழிலாளர்கள் பாதிக்கப்படுவதாக வதந்தி பரப்பியர். மேலும் 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளது பிகார் அரசு.  ஹோலி பண்டிகைக்காக மட்டுமே தொழிலாளர்கள் தமிழகத்தில் இருந்து ஊர் திரும்புகிறார்கள் .  மற்றபடி அச்சப்பட்டு அவர்கள் ஊர் திரும்ப வில்லை என்று பீகார் போலீசார் விளக்கமளித்துள்ளனர் .

இந்த நிலையில் திமுக மாணவர் அணி தலைவர் ராஜீவ் காந்தி,  வடமாநில விவகாரத்தில் சீமானை குற்றம்சாட்டியிருக்கிறார்.  இதற்கு நாம் தமிழர் கட்சியினர் மற்றும் நெட்டிசன்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர்.   நேற்று வரைக்கும் சீமானிடம் இருந்து இதைத்தானே பேசிக் கொண்டிருந்தீர்கள்.  இப்போது மட்டும் என்ன திடீரென்று எதிர்க்கிறீர்கள் ?நேற்று ஒரு பேச்சு இன்று ஒரு பேச்சா என்று விளாசி எடுக்கின்றனர்.