நாம் தமிழர் கட்சியின் B டீம் தான் பாஜக - சீமான்

 
seeman

இன படுகொலை நாள் மாபெரும் இன எழுச்சி பொது கூட்டம் நாம் தமிழர் கட்சியின் சார்பில் பூந்தமல்லியில் வண்டலூர் - மீஞ்சூர் வெளிவட்ட சாலை அருகே நசரத்பேட்டையில் நடைபெற்றது. இதில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு ஈழ படுகொலை சுவடுகள் மற்றும் ஒலி நாடா ஆகியவற்றை வெளியிட்டார். பின்னர் மலர் வணக்கம் நிகழ்த்தி கொடியை ஏற்றினார்.

Seeman's tale of controversies...Then on KT Raghavan's sleaze video and now  on actor Vadivelu and DMK! | The New Stuff

தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய சீமான், “பேரறிவாளன் விடுதலை செய்தி மகிழ்ச்சியை விட நம்பிக்கையை தருகிறது. தொடர் சட்டம் மற்றும் அரசியல் போராட்டம் நடத்தினார்.  அவரே அவரது விடுதலையை சாத்தியபடுத்தினார். இந்த தீர்ப்பு அனைவருக்கும் பொருந்தும் அவர்களையும் விடுதலை செய்ய வேண்டும்- இதற்கு தனியாக போராட்டங்கள் செய்ய வைக்காதீர்கள். ஆம்பூரில் பிரியாணி திருவிழா மாட்டு கறிக்கு தடை என்பதால் பிரியாணி விருந்துக்கு தடை போடப்பட்டது


பிரதமரிடம் சொல்லுங்கள் மாட்டு கறி ஏற்றுமதியை நிறுத்துங்கள் என்று... இலங்கை, இந்தியா இரண்டு பிரதமர்களும் இன படுகொலையாளர்கள். நான் வேலை தூக்கும் போது விமர்சனம் செய்தார்கள் அதே வேலை பாஜக எடுத்த போது பாராட்டியது. பாஜக தான் நாம் தமிழர் கட்சியின் B டீமாக செயல்பட்டுவருகிறது” எனக் கூறினார்.