என்னை எதிர்த்து 1% ஓட்டு அதிகமாக வாங்க முடியுமா? அண்ணாமலைக்கு சீமான் சவால்

 
என்னை எதிர்த்து 1% ஓட்டு அதிகமாக வாங்க முடியுமா? அண்ணாமலைக்கு சீமான் சவால்

என்னை எதிர்த்து போட்டியிட்டு 1% வாக்குகளாவது அதிகம் வாங்க முடியுமா? என பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் சவால் விடுத்துள்ளார்.

இந்தியை திணிக்க முயன்றால்.. மீண்டுமோர் மொழிப்போர் வெடிக்கும்..  - சீமான் எச்சரிக்கை..

அண்மையில் செய்தியாளர்களை சந்தித்த சீமான்,  நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் மோடி தமிழகத்தில் எந்த இடத்தில் போட்டியிட்டாலும், அங்கு அவரை எதிர்த்து போட்டியிடுவேன். அப்போதுதான் எனக்கு ஒரு விடிவு காலம் வரும் எனக் கூறியிருந்தார். இதற்கு பதிலடி கொடுத்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, சீமான் எங்கு வேண்டுமானாலும் போட்டியிட்டு கொள்ளட்டும், எங்கு போட்டியிட்டாலும் தோற்கத்தானே போகப்போகிறார் என விமர்சித்திருந்தார். 


பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள சீமான், “நான் எங்கு நின்றாலும் தோற்கத்தானே போகிறார் என அண்ணாமலை கூறியிருகிறார். அண்ணாமலை எங்கே நின்றாலும் வெற்றி பெற்றுவிடுவாரா? தமிழ்நாட்டில் நாங்கள் தனித்து போட்டி போடுவோம், என்னைவிட ஒரு ஓட்டு அதிகமாக வாங்கி  காட்ட முடியுமா?. சீட் வாங்கவே எடப்பாடி பழனிசாமி வீட்டுக்கு நடையாக நடக்கவேண்டும் ” என்றார். 

சீமான்

தொடர்ந்து பேசிய அவர், “காவிரி விவகாரத்தில் தமிழகத்திற்கு தண்ணீர் தர மறுக்கும் காங்கிரஸ் கட்சியை கூட்டணியில் இருந்து வெளியேற்றினால், வரும் மக்களவை தேர்தலில் போட்டியிலிருந்து விலகிக்கொண்டு திமுகவுக்கு ஆதரவளிக்க தயாராக இருக்கிறேன்” என்றார்.