தமிழகத்தில் பள்ளிகள் திறக்க தற்போது சாத்தியக்கூறு இல்லை! – செங்கோட்டையன் பேட்டி

 

தமிழகத்தில் பள்ளிகள் திறக்க தற்போது சாத்தியக்கூறு இல்லை! – செங்கோட்டையன் பேட்டி

தமிழகத்தில் தற்போதைய சூழலில் பள்ளிக்கூடங்களை திறப்பதற்கான சாத்தியக்கூறு இல்லை என்று தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் ஜனவரி 6ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளதாக சமூக ஊடகங்களில் வதந்தி பரவியது. ஆனால் இது தவறான தகவல் என்று பள்ளிக் கல்வித் துறை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. ஊரக உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தாமதமானதால் ஜனவரி 6ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று கடந்த ஜனவரி மாதம் அறிவிப்பு வெளியானது. அந்த அறிவிப்பை தற்போது வெளியிட்டது போல சிலர் பகிர்ந்து வருவது தெரிந்தது.

தமிழகத்தில் பள்ளிகள் திறக்க தற்போது சாத்தியக்கூறு இல்லை! – செங்கோட்டையன் பேட்டி
இந்த நிலையில் செங்கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டி அளித்த போது கூறியதாவது:
“தமிழகத்தில் தற்போது பள்ளிகள் திறக்கப்படாது. பள்ளிக்கூடங்களை தற்போது திறப்பதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை, கொரோனா பரவல் சூழ்நிலை மாறிய பிறகே பள்ளிக்கூடங்களைத் திறப்பது குறித்து முடிவெடுக்க முடியும். இணையவழி கல்வி தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் பேசி இரண்டு நாளில் தமிழக அறிவிப்பு வெளியிடப்படும்” என்றார்.