சவுக்கு சங்கர் - காயத்ரி ரகுராம் மோதல்
தமிழக பாஜகவுக்கு தலைவராக அண்ணாமலை வந்தது முதல் அவருக்கும் கட்சியில் இருந்த நடிகை காயத்ரி ரகுராமுக்கும் மோதல் போக்கு இருந்து வந்தது. டெய்சி சரண்- திருச்சி சூர்யா சிவா ஆடியோ விவகாரத்தில் இந்த மோதல் வலுத்தது. இதை அடுத்து காயத்ரி ரகுராம் திமுகவினருடன், முதல்வர் மருமகன் சபரீசன் உடன் தொடர்பில் இருந்து பாஜகவுக்கு எதிராக செயல்படுகிறார் என்று அண்ணாமலையும் அவரது ஆதரவாளர்களும் ஆதாரங்களுடன் குற்றம் சாட்டை வர , பாஜகவில் இருந்து வெளியேறினார் காயத்ரி ரகுராம்.
அதன் பின்னர் அண்ணாமலையை விமர்சிப்பதையே தனது முழு நேர வேலையாக வைத்துள்ளார் காயத்ரி ரகுராம். இந்த நிலையில் அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கரையும் கடுமையாக விமர்சிக்க தொடங்கி விட்டார் காயத்ரி ரகுராம்.
காயத்ரி ரகுராம் பாஜகவில் இருந்த போது, பொறுப்பில் இருந்து நீக்கப்பட போகிறார் காயத்ரி ராம் என்று முதலில் சொன்னவர் சவுக்கு சங்கர். அதன்படியே நடந்து விட்டதால், ஒரு கட்சி அலுவலகத்தில் நடப்பது/நடக்கும் முன்பாகவே உங்களுக்கு எப்படி தெரிந்தது? என்று சவுக்கு சங்கருக்கு கேள்வி எழுப்பி இருந்தார் காயத்ரி ரகுராம்.
இப்போது, சவுக்கு சங்கரின் கீழ்தான் அண்ணாமலை செயல்பட்டு வருகிறார். அண்ணாமலையின் முதலாளி சவுக்கு சங்கர் தான் என்று விமர்சிக்க தொடங்கி விட்டார் காயத்ரி ரகுராம்.
அமைச்சர் பிடிஆரின் ஆடியோ விவகாரத்தில், சவுக்கு சங்கர் அண்ணா, அண்ணாமலை உங்களுக்கு கீழ் வேலை செய்கிறாரா? அண்ணாமலை ஏதோ ஒரு கார்ப்பரேட் நிறுவனத்தில் ஆலோசகராகச் சேர்ந்துள்ளதாக செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார். ஆடியோ வீடியோ கசிவு மற்றும் சோர்ஸில் உங்களுக்கு கடும் போட்டியை கொடுக்கிறார். சவுக்கு ஷங்கர் சகோ. அண்ணாமலையை ப்ரோமோட் செய்து உங்கள் நிறுவனத்தில் 200 போனஸ் கொடுங்கள், அதாவது அவர் உங்கள் நிறுவனத்தில் வேலை செய்தால் என்று தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார் காயத்ரி ரகுராம்.
இதற்கு சவுக்கு சங்கர், உங்கள் உலகம் அண்ணாமலையை சுற்றி மட்டுமே சுழல்கிறதா ? என்று காயத்ரி ரகுராமை கேட்டிருந்தார். அதற்கு காயத்ரி ரகுராம், நீங்கள் அண்ணாமலையை ஆதரிக்கிறீர்கள். நீங்கள் அண்ணாமலை மீது வெறித்தனமாக இருப்பது மிகவும் வெளிப்படையானது. அண்ணாமலையின் பேட்டிகளை விட உங்கள் பேட்டிகளையும் ட்வீட்களையும் அதிகம் பார்க்கிறேன். நீங்கள் முதலாளியாக இருக்கும்போது, உங்கள் உதவியாளர் அண்ணாமலையை நான் ஏன் நினைக்க வேண்டும்? என்று சொல்லி வருகிறார்.