பல கோடி செலவு செய்தேன்.. சீட் கொடுக்காமல் துரோகம் செய்து விட்டனர்.. பா.ஜ.க.விலிருந்து வெளியேறிய பிரபலம்

 
 சதீஷ் குமார் சர்மா

பா.ஜ.க. இப்போது அதே கட்சி அல்ல, கொள்ளையடிப்பவர்களுக்குதான் கட்சியில் மதிப்பு என்று மதுரா சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிட பா.ஜ.க. சீட் வழங்கதால் அந்த கட்சியிலிருந்து வெளியேறிய சதீஷ் குமார் சர்மா தெரிவித்தார்.

உத்தர பிரதேசம் மதுராவில் பா.ஜ.க.வின் பிரபல தலைவராக இருந்தவா் சதீஷ் குமார் சர்மா.  இவர் எதிர்வரும் உத்தர பிரதேச சட்டப்பேரவையில் மதுரா சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிட திட்டமிட்டு இருந்தார். மேலும் கட்சி தன்னை அந்த தொகுதி வேட்பாளராக அறிவிக்கும் என்ற மிகுந்த நம்பிக்கையில் இருந்ததாக தெரிகிறது. ஆனால் பா.ஜ.க. அவருக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கவில்லை. இதனையடுத்து சதீஷ் குமார் சர்மா பா.ஜ.க.விலிருந்து விலகினார்.

பா.ஜ.க.

இது தொடர்பாக சதீஷ் குமார் சர்மா ஊடகத்திடம் கூறியதாவது: பா.ஜ.க. இப்போது அதே கட்சி அல்ல. இப்போது பா.ஜ.க. தனது சொந்த சித்தாந்தத்தை பின்பற்றவில்லை. கட்சியை கொள்ளையடிப்பவர்களுக்குதான் இங்கு மதிப்பு, மீதமுள்ள, அர்ப்பணிப்பு மற்றும் நேர்மையான தொண்டர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள். மக்கள் பணிகளை செய்ய நான் எப்போதும் எனது சொந்த வளங்களை (செல்வம்) பயன்படுத்துவேன். 

பணம்

அதற்கு ஈடாக கட்சி தேர்தலில் போட்டியிட டிக்கெட்டை மறுத்தது. கட்சியிலிருந்து விலகுவதாக ராஜினாமா கடிதம் கொடுத்துள்ளேன். இனிமேல் எனக்கும் பா.ஜ.க.கவுககும் எந்த சம்பந்தம் இல்லை. நான் ஐந்து வருடங்களாக பா.ஜ.க.வில் பணியாற்றி பல கோடி ரூபாய் செலவு செய்தேன், ஆனால் அவர்கள் எனக்கு துரோகம் செய்து விட்டனர். எதிர்வரும் தேர்தலில் 1.25 லட்சம் வாக்குகளை பெறுவதே எனது இலக்காக இருந்தது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.