அன்று சசிகலா இன்று எடப்பாடி!கேசிபி சூசகம்! இபிஎஸ் டீம் ஆவேசம்

ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர் அதிமுகவின் பொதுச்செயலாளராக பொறுப்பேற்ற சசிகலா, ஜெயலலிதாவை போலவே நெற்றி பொட்டு, கொண்டை, உடை என்று தன்னை மாற்றிக்கொண்டார். இது அப்போது அதிமுகவில் சலசலப்பை ஏற்படுத்தி இருந்தது. அரசியலில் விமர்சனத்தை எழுப்பி இருந்தது. அதேபோன்று அதிமுகவின் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் எடப்பாடி பழனிச்சாமி தொப்பி, கூலிங் கிளாஸ் , துண்டை போட்டு கொண்டு எம்ஜிஆர் மாதிரி காட்சி அளித்திருக்கிறார் . இதை ஒரு பக்கம் அதிமுகவினர் கொண்டாடி வந்தாலும் இன்னொரு தரப்பினரிடையே இது சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
அதிமுக பொதுக்குழு மற்றும் பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிரான வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பு அனைத்தும் எடப்பாடி பழனிச்சாமிக்கு சாதகமாக அமைந்தது. இதை அடுத்து அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் முடிவு இன்று அறிவிக்கப்பட்டது. அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி போட்டி இன்று தேர்ந்தெடுக்கப்பட்டார் என்று அதிமுக தேர்தல் ஆணையர் அறிவித்தனர்.
இதை அடுத்து அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி பொறுப்பேற்றார். பொதுச் செயலாளராக பதவி ஏற்ற பின்னர் எடப்பாடி பழனிச்சாமி சென்னை மெரினா கடற்கரைக்கு சென்று அதிமுகவின் முன்னாள் பொதுச் செயலாளர்கள் மற்றும் முன்னாள் முதல்வர்களான எம்ஜிஆர் , ஜெயலலிதா நினைவிடங்களுக்கு சென்று மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் அதிமுக தலைமை அலுவலகத்திற்குச் சென்ற அவருக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பளித்தனர்.
அப்போது ஒரு தொண்டர் எம்ஜிஆர் மாதிரியே தொப்பி எம்ஜிஆர் மாதிரியே கூலிங் கிளாஸ், எம்ஜிஆர் அணிந்திருப்பதை போலவே தோளில் துண்டு ஆகியவற்றை எடப்பாடி பழனிச்சாமிக்கு வழங்கினார். அதையும் எடப்பாடி பழனிச்சாமி மகிழ்ச்சியுடன் வாங்கி அணிந்து கொண்டார். அப்போது எம்ஜிஆர் தோற்றத்தில் காட்சியளித்தார் எடப்பாடி பழனிச்சாமி. இதை பார்த்த தொண்டர்கள் உற்சாக முழக்கம் எழுப்பினர்.
இதற்கு அதிமுகவின் முன்னாள் எம்பி கேசி பழனிச்சாமி, ‘’இதே போன்று தான் சசிகலாவும் அம்மாவைப்போல போலி வேடமிட்டார். அவருக்கு இறுதியில் என்ன நிகழ்ந்தது என்பதை நாடறியும். அதே முடிவை நோக்கி எடப்பாடி பழனிசாமி பயணிக்கிறார்’’ என்று பதிவிட்டிருக்கிறார். இதற்கு எடப்பாடி ஆதரவாளர்கள், ‘’சசிகலா தானாகவே அப்படி ஒப்பனை செய்துகொண்டார். ஆனால், எடப்பாடியாரோ தொண்டர் விருப்பத்திற்கு இணங்கி அவர் கொடுத்ததை வாங்கி கொஞ்ச நேரம் அணிந்து அவர்களை திருப்திப்படுத்தி இருக்கிறார்’’ என்கிறார்கள்.
இதே போன்று தான் சசிகலாவும் அம்மாவைப்போல போலி வேடமிட்டார் அவருக்கு இறுதியில் என்ன நிகழ்ந்தது என்பதை நாடறியும் அதே முடிவை நோக்கி எடப்பாடி பழனிசாமி பயணிக்கிறார் @EPSTamilNadu #aiadmk #kcpalanisamy pic.twitter.com/09qGr7eotY
— K C Palanisamy (@KCPalanisamy1) March 28, 2023