"அதிமுகவின் நிலை மாறும்; தலை நிமிரும்.. தொண்டர்களே இது உறுதி" - சத்தியம் செய்த சசிகலா!

 
சசிகலா

அதிமுக பொதுச்செயலாளர் என்ற லெட்டர் பேடில் அறிக்கை வெளியிட்டுள்ள சசிகலா, "அநீதியை எதிர்த்தும், துரோகத்தை வீழ்த்தியும் தோன்றியதுதான் அதிமுக எனும் பேரியக்கம். இது உயிர்த் தொண்டர்களின் உழைப்பாலும், தியாகத்தாலும் உருவான ஒரு இயக்கம். புரட்சி தலைவரும் புரட்சி தலைவியும் எத்தனையோ குழ்ச்சிகளையும் தடைகளையும் தாண்டி, வென்று எடுத்த ஒரு மாபெரும் இயக்கம். கழகத்தையும் தொண்டர்களையும் காப்பதே முதல் கடமை என்பதை மனதில் கொண்டு எனது வாழ்க்கை பயணம் இந்த நொடியிலும் சென்று கொண்டு இருக்கிறது. 

तमिलनाडु की राजनीति में शशिकला की एंट्री! AIADMK के स्थापना दिवस से पहले  पहुंचीं जयललिता मेमोरियल, नहीं थमे आंसू | Sasikala breaks down visits  jayalalithaa memorial ...

அதிமுக தொண்டர்களுக்கான ஒரு இயக்கமாக செயல்பட்டு நாட்டின் 3ஆவது பெரிய கட்சி என்ற நிலைக்கு சென்றதை யாராலும் மறுக்க முடியாது. ஆனால், இன்றைய நிலையைப் பார்க்கும்போது, இதற்காகவா நம் அருபெரும் தலைவர்களும் தங்கள் இரத்தத்தை வியர்வையாக்கி ஓயாது உழைத்து கழகத்தை காப்பாற்றினார்கள் என்று நினைத்து பார்க்கையில் ஒவ்வொரு தொண்டனின் நெஞ்சமும் குமுறுகிறது. இந்த இயக்கத்தின் வளர்ச்சிக்காக எத்தனையோ தன்னலமற்றவர்கள் தங்கள் இன்றுயிரையும் தியாகம் செய்து தன் வாழ்க்கையை அர்ப்பணித்து இருக்கிறார்கள்.

அன்வர்ராஜா நீக்கப் பின்னணி... யாருக்கு வைக்கப்பட்ட செக்? | what's behind  the action against Anwar raja by admk

அவர்களுடைய உழைப்பும் இயாகங்களும் எங்கே வீணாக போய் விடுமோ என்ற கவலை ஏற்படுகிறது. என்றைக்கு தனி மனித விருப்பு வெறுப்புகளுக்கு இயக்கம் பயன்பட்டதோ அன்றிலிருந்து அதன் மதிப்பு குறைந்தது. மேலும் தன் தொண்டர்களையும் மறந்தது. இதனால் ஏளன பேச்சுகளும் சிறுமைப்படுத்துவதும் தொடர்ந்து அரங்கேறி வருகிறது. இருப்பினும் கழகம் மீண்டும் பொலிவோடு பழைய நிலைக்கு வர வேண்டும் என்று ஒவ்வொரு நொடியும் எதிர்பார்த்து தங்கள் வாழ்க்கையை நம்பிக்கையோடு வாழ்ந்துக் கொண்டு இருக்கிறார்கள்.

ஓபிஎஸ், இபிஎஸ் நியமனம் செல்லும் - சென்னை உயர்நீதிமன்றம் | Chennai High  court closed the case filed by ADMK candidate against EPS and OPS |  Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News ...

உங்கள் நம்பிக்கை கண்டிப்பாக வீண் போகாது. நீங்கள் அனைவரும் சோர்ந்து போகாமல் தைரியமாக இருங்கள். ஒரு சிலருடைய தேவைகளுக்காகவும் விருப்பு வெறுப்புகளுக்காகவும் செயல்பட்டு கொண்டு இருக்கின்ற நம் இயக்கத்தை சரி செய்து, மீண்டும் அதை தொண்டர்களுக்கான ஒரு இயக்கமாகவும், ஒவ்வொரு தொண்டனும் அதிமுகவை சேர்ந்தவர் என்று பெருமையோடும், மிடுக்கோடும், கர்வத்தோடும் தன்னை இந்த சமூகத்தில் சொல்லிக் கொள்ளும் வகையில் நம் இயக்கத்தை விரைவில் மாற்றிக் காட்டுவோம். 

சசிகலா பற்றிய கேள்வி- நைசாக நழுவிய எடப்பாடி! | Bhoomitoday

அனைவரும் கவலைப்படாமல் சிறிது காலம் பொறுத்து இருங்கள். விரைவில் அதிமுகவின் நிலை மாறும், தலை நிமிரும், இது உறுதி. உண்மைகளும், நியாயங்களும் என்றைக்கும் தோற்றதாக சரித்திரம் இல்லை. எத்தனை இடர்பாடுகள், சோதனைகள் ஏற்பட்டாலும் அவற்றையெல்லாம் தகர்த்தெறிந்து என் உயிர் மூச்சு உள்ளவரை நம் இயக்கத்தை காத்து, தொண்டர்களின் இயக்கமாக மாற்றும் வரை நான் உழைத்துக் கொண்டே இருப்பேன். ஓய்ந்து விடமாட்டேன் என்று உறுதி கூறுகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.