#BREAKING அடுத்த ஆட்சி எனது ஆட்சிதான்- சசிகலா சூளுரை

 
ops sasikala

அரசியலுக்கு வருவேன் என்று சொன்ன சசிகலா திடீரென கட்சியின் நலன் கருதி அரசியலை விட்டு ஒதுங்குவதாக கடந்த சட்டசபைத் தேர்தலின் போது அறிவித்தார். திடீரென ஆன்மிக பயணம் கிளம்பி கோவில் கோவிலாக வலம் வந்துகொண்டிருக்கிறார்.

சோதனைகளை வென்ற அதிமுக

ஆன்மீக பயணம் என்றாலும், ஆங்காங்கே அரசியலும் அவர் பேசிவருகிறார். அண்மையில் தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு தாலுகாவில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் பேசிய சசிகலா, நான் இருக்கின்ற வரை இந்த இயக்கத்தை யாராலும் ஒன்றும் செய்ய முடியாது. இயக்கம் உன்னத நிலையை அடைய, நானே காரணமாக இருப்பேன். அது வரை ஓயமாட்டேன் என்பதையும் இந்த நேரத்தில் உறுதியோடு தெரிவித்துக் கொள்கிறேன் என பேசினார். 

நாளுக்கு நாள் அதிமுகவில் சசிகலாவுக்கு ஆதரவு குரல் பெருக, அதிமுக ஒருங்கிணைப்பாளார் ஓ பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும் அமைதிகாத்துவருகின்றனர். இந்நிலையில் இன்று சசிகலா தஞ்சை விளாரில் அமைந்துள்ள முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் வி.கே.சசிகலா  மலர்  தூவி அஞ்சலி செலுத்தினார்.

அதன்பின் சிவகங்கைக்கு சென்ற அவர் அங்கிருக்கும் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். செல்லும் இடம்மெல்லாம் அவருக்கு அதிமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். சிவகங்கையில் செய்தியாளர்களிடம் பேசிய சசிகலா, “அதிமுகவுடன் இணைவது நிச்சயம், அடுத்து எங்களுடைய ஆட்சி - அது மக்களுடைய ஆட்சியாக இருக்கும். ஓராண்டுகால திமுக ஆட்சியில் மக்கள் கஷ்டத்தை அனுபவித்து வருகிறார்கள், எந்த நல்லதும் செய்யவில்லை. அடுத்த ஆட்சி எனது ஆட்சிதான். அது மக்களுக்கான ஆட்சியாக இருக்கும். மத்திய அரசை குறை சொல்வதில் எந்த பயனும் இல்லை. மக்களுக்கு ஆக்கப்பூர்வமான திட்டங்களை செய்யவேண்டும்.” எனக் குற்றஞ்சாட்டினர்.