காங்கிரஸ் இல்லாமல் பா.ஜ.க.வுக்கு எதிரான முன்னணியை உருவாக்க மம்தா முயற்சி செய்கிறார்... சஞ்சய் ரவுத்

 
அடுத்த 25 வருஷத்துக்கு சிவ சேனா தலைமையில்தான் ஆட்சி- சஞ்சய் ரவுத் உறுதி

காங்கிரஸ் இல்லாமல் பா.ஜ.க.வுக்கு எதிரான முன்னணியை உருவாக்க திரிணாமுல் காங்கிரஸ் தலைவி மம்தா பானர்ஜி முயற்சி செய்வதாக சஞ்சய் ரவுத் தெரிவித்தார்.

சிவ சேனாவின் மூத்த தலைவர்களில் ஒருவரும், மாநிலங்களவை எம்.பி.யுமான சஞ்சய் ரவுத் சாம்னா பத்திரிகையில் எழுதியிருப்பதாவது: கடந்த வாரம் மும்பை வந்த மம்தா பானர்ஜி, சிவ சேனாவின் மூத்த தலைவர்களில் ஒருவரும், சுற்றுலாத்துறை அமைச்சருமான ஆதித்யா தாக்கரே, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் ஆகியோரை சந்தித்தார். அப்போது தனது மாநிலத்துக்கு (மேற்கு வங்கம்) அப்பால் திரிணாமுல் காங்கிரஸை விரிவாக்க விரும்புவதாக தெரிவித்தார்.

மம்தா பானர்ஜி

கோவா, மேகாலயா மற்றும் திரிபுரா ஆகிய மாநிலங்களில் திரிணாமுல் காங்கிரஸ் தடம் பதித்துள்ளது. இது காங்கிரஸ் இல்லாமல் அவர் புதிததாக ஏதாவது செய்ய நினைக்கிறார் என்று தெரிகிறது. சிவ சேனா மற்றும் தேசியவாத காங்கிரஸின் வலுவான இருப்பு காரணமாக மகாராஷ்டிராவில் நுழைவதற்கு திரிணாமுல் காங்கிரசுக்கு ஆர்வம் இல்லை என்று மம்தா பானர்ஜி தெரிவித்தார்.

தேசியவாத காங்கிரஸ்

மகாராஷ்டிரா மற்றும் மேற்கு வங்க மக்கள் அதிகாரம், பணம் மற்றும் மத்திய புலனாய்வு அமைப்புகளின் தீவிர அடக்குமுறை பயன்பாட்டை தோற்கடித்தனர். மேற்கு வங்க அரசுக்கும், மத்திய அரசுக்கும் இடையிலான மோதலை குறிப்பிட்டு மராட்டியர்களும், வங்காளிகளும் தற்காப்பு குணம் கொண்டவர்கள், அவர்கள் பதவி விலக மாட்டார்கள் என்று பானர்ஜி குறிப்பிட்டதை மேற்கோள் காட்டியிருந்தார்.