கோவாவில் காங்கிரஸ் தலைவர்கள் தங்களால் தனி பெரும்பான்மை பெற முடியும் என்று நினைக்கிறார்கள்... சஞ்சய் ரவுத்

 
காங்கிரஸ்

கோவா சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் தலைவர்கள் தங்களால் தனி பெரும்பான்மை பெற முடியும் என்று நினைக்கிறார்கள் என்று சிவ சேனா எம்.பி. சஞ்சய் ரவுத் தெரிவித்தார்.

கோவாவில் 40 உறுப்பினர்களை கொண்ட அம்மாநில சட்டப்பேரவைக்கு புதிய உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் பிப்ரவரி 14ம் தேதியன்று ஒரே கட்டமாக நடைபெற உள்ளது.  கோவா சட்டப்பேரவை தேர்தலில் பா.ஜ.க., காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி, சிவசேனா-தேசியவாத காங்கிரஸ் கூட்டணி என 5 முனை போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சஞ்சய் ரவுத்

சிவ சேனாவும், தேசியவாத காங்கிரஸூம் காங்கிரஸூடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்திக்க விரும்பின. ஆனால் காங்கிரஸ் கட்சி பிடி கொடுக்கவில்லை. இந்த சூழ்நிலையில்,  கோவாவில் காங்கிரஸ் தலைவர்கள் தாங்கள் தனி  பெரும்பான்மை பெறுவோம் என்று நினைக்கிறார்கள் என்று சிவ சேனாவின் சஞ்சய் ரவுத் தெரிவித்துள்ளார்.

தேசியவாத காங்கிரஸ்

சஞ்சய் ரவுத் இது தொடர்பாக கூறியதாவது: நாங்கள் காங்கிரஸூடன் பேச்சுவார்த்தை நடத்தினோம். ஆனால் எந்த முடிவும் வரவில்லை. கோவாவில் சிவ சேனாவும், தேசியவாத காங்கிரஸூம் மகாராஷ்டிராவில் அமைந்துள்ள மகா விகாஸ் அகாதி போன்ற கூட்டணியை அமைக்க முயன்றது. ஆனால் காங்கிரஸ் தலைவர்கள் தாங்கள் தனி பெரும்பான்மை பெற முடியும் என்று நினைக்கிறார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.