கோவாவில் கெஜ்ரிவால் வீடு வீடாக பிரச்சாரம் செய்ய வேண்டிய அவசியம் என்ன?.. சிவ சேனா கேள்வி

 
தேவையில்லாமல் வாய் விட்டு சிங்கப்பூரிடம் வாங்கி கட்டிக்கொண்ட அரவிந்த் கெஜ்ரிவால்!

டெல்லியில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வேளையில், கோவாவில் அரவிந்த் கெஜ்ரிவால் வீடு வீடாக சென்று பிரச்சாரம் செய்ய வேண்டிய அவசியம் என்ன? என்று சிவ சேனா கேள்வி எழுப்பியுள்ளது.

கோவாவில் 40 உறுப்பினர்களை கொண்ட அம்மாநில சட்டப்பேரவைக்கு புதிய உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் பிப்ரவரி 14ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. மார்ச் 10ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகும். ஆம் ஆத்மி கட்சி எதிர்வரும் கோவா சட்டப்பேரவை தேர்தலில் கணிசமான இடங்களில் வெற்றி பெற்று தனது  பலத்தை நிருபிக்க வேண்டும் என்று முனைப்பில் செயல்பட்டு வருகிறது.

ஆம் ஆத்மி

ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த சனிக்கிழமையன்று கோவா சென்று ஆம் ஆத்மி தலைவர்களுடன் இணைந்து வீடு வீடாக சென்று தேர்தல் பிரச்சாரம் செய்தார். டெல்லியில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் வேளையில், அரவிந்த் கெஜ்ரிவால் கோவா சென்று வீடு வீடாக பிரச்சாரம் செய்ததை சிவ சேனா விமர்சனம் செய்துள்ளது.

சஞ்சய் ரவுத்

சிவ சேனாவின் மூத்த தலைவர்களில் ஒருவரும், அந்த கட்சியின் எம்.பி.யுமான சஞ்சய் ரவுத் இது தொடர்பாக கூறியதாவது: டெல்லியில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில், கோவாவில் டெல்லி முதல்வர் வீடு வீடாக பிரச்சாரம் செய்து வருகிறார். என்ன அவசியம்? அவர் தனது செய்தியை மட்டுமே தெரிவிக்க முடியும். அவரது கட்சி (ஆம் ஆத்மி) மிகவும் வலுவாக இருந்தால், அவர் ஏன் (கோவா) அங்கு செல்ல வேண்டும். கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வரும் டெல்லியில் அவர் அதிகம் தேவைப்படுகிறார். கோவா சட்டப்பேரவை தேர்தலில் 10 முதல் 15 தொகுதிகளில் சிவ சேனா போட்டியிடும். தேசியவாத காங்கிரஸ் தலைவர்களும் கோவாவுக்கு வருகிறார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.