ஐ.எஸ்.ஐ.எஸ். மற்றும் இந்துத்துவாவையும் ஒன்று என்று சொல்லவில்லை, ஆனால் ஒரே மாதிரியானவை.. சல்மான் குர்ஷித்

 
சிங்கம் சிங்கிளாதான் வரும்.. உத்தர பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் தனித்து போட்டி.. சல்மான் குர்ஷித் தகவல்

ஐ.எஸ்.ஐ.எஸ்.  மற்றும்  இந்துத்துவாவையும் ஒன்று என்று சொல்லவில்லை, ஆனால் ஒரே மாதிரியானவை என்று சல்மான் குர்ஷித் புது விளக்கம் கொடுத்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சல்மான் குர்ஷித் அண்மையில் எழுதிய சன்ரைஸ் ஓவர் அயோத்தி, நேஷன்ஹூட் இன் அவர் டைம்ஸ் என்ற புத்தகத்தில், இந்து சமயத்தை பயங்கரவாதத்துடன் இழிவுபடுத்தி மற்றும் ஒப்பிட்டு பேசியதாக கூறப்பட்டதை தொடர்ந்து சர்ச்சை எழுந்தது. இந்நிலையில், ஐ.எஸ்.ஐ.எஸ்.  மற்றும்  இந்துத்துவாவையும் ஒன்று என்று சொல்லவில்லை, ஆனால் ஒரே மாதிரியானவை என்று சல்மான் குர்ஷித் புது விளக்கம் கொடுத்துள்ளார்.

சல்மான் குர்ஷித் எழுதிய புத்தகம்

உத்தர பிரதேசம் சம்பல் மாவட்டத்தில் உள்ள கல்கி தாமுக்கு  சல்மான் குர்ஷித் சென்று இருந்தார். கல்கி தாமுக்கு செல்வதற்கு முன் சல்மான் குர்ஷித் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது: நான் கல்கி தாமுக்கு செல்கிறேன். எந்த மதத்துடனும் எனக்கு எதாவது பிரச்சினை வந்தால் நான் இங்கு இருக்க மாட்டேன். இந்து மதம் உலகில் அமைதியை பரப்பும் என்று நான் நம்புகிறேன். 

தீவிரவாதிகள்

சிலர் இந்து மதத்தின் இழிவுப்படுத்த முயற்சிப்பதாக தெரிகிறது. அவர்கள் இந்து மதத்தின் எதிரிகள், அவர்கள் தங்கள் உண்மை வெளியே வந்து விடுமோ என்று பயப்படுகிறார்கள், அவர்கள் தங்கள் உண்மையை வெளிப்படுத்தும எந்த புத்தகத்தையும் தடை செய்வார்கள். ஐ.எஸ்.ஐ.எஸ். மற்றும் போகோ ஹராம் இஸ்லாத்தை இழிவுப்படுத்துகிறது. ஆனால் எந்த இஸ்லாமிய ஆதரவாளர்களும் அதை எதிர்க்கவில்லை.  ஐ.எஸ்.ஐ.எஸ்.  மற்றும்  இந்துத்துவாவையும் ஒன்று என்று சொல்லவில்லை, ஆனால் ஒரே மாதிரியானவை என்று கூறினேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.