காங்கிரசுக்கு வாக்களிப்பது மட்டுமே உத்தரபிரதேச மக்களுக்கு எஞ்சியிருக்கும் ஒரே வாய்ப்பு... சச்சின் பைலட்

 
கோட்டா குழந்தைகள் இறப்பு…. முந்தைய பா.ஜ.க. அரசை குறை கூறுவதில் அர்த்தமில்லை… காங்கிரஸ் துணை முதல்வர் சச்சின் பைலட்

காங்கிரசுக்கு வாக்களிப்பது மட்டுமே உத்தரபிரதேச மக்களுக்கு எஞ்சியிருக்கும் ஒரே வாய்ப்பு என்று சச்சின் பைலட் தெரிவித்தார்.

காங்கிரஸ் கட்சியின் இளம் தலைவர்களில் ஒருவரும், ராஜஸ்தானின் முன்னாள் துணை முதல்வருமான சச்சின் பைலட் செய்தியாளர்களிடம் பேசுகையில் கூறியதாவது: உத்தர பிரதேசத்தில் தேர்தலில் பா.ஜ.க. ஏற்கனவே தோல்வியடைந்து விட்டது என்று நான் நம்புகிறேன். சற்று சிந்தித்து பாருங்கள். பெண்களுக்கு 40 சதவீத வேட்புமனுவை காங்கிரஸ் மட்டுமே தரப்போகிறது. காங்கிரஸ் தனது தேர்தல் அறிக்கையில் விவசாயிகளின் நலன்களை பற்றி பேசுகிறது. எனவே காங்கிரசுக்கு வாக்களிப்பது மட்டுமே உத்தரபிரதேச மக்களுக்கு எஞ்சியிருக்கும் ஒரே வாய்ப்பு. 

அகிலேஷ் யாதவ்

உத்தர பிரதேசத்தில் அகிலேஷ் யாதவ் மற்றும் மாயாவதி எதிர்க்கட்சியாக எங்கும் காணப்படவில்லை. தேர்தல் நெருங்கும்  போதே அகிலேஷ் யாதவ் தெருக்களில் தோன்ற ஆரம்பித்து விட்டார். ஆனால் கடந்த 3 ஆண்டுகளாக அகிலேஷ் யாதவ் ஹத்ராஸ் பலாத்கார சம்பவம், லக்கிம்பூர் கெரி விவசாயிகள் சம்பவம் போன்ற பிரச்சினைகளில் மவுனம் காத்தார். 

புலம்பெயர்ந்தோரின் அவல நிலைக்கு காங்கிரசும், பா.ஜ.க.வுக்கும் சம பொறுப்பு உள்ளது…. மாயாவதி குற்றச்சாட்டு..

விவசாயிகள் பிரச்சினைகள் அல்லது சுரண்டப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட மக்கள் மீதான வன்கொடுமைகள் போன்ற பிரச்சினைகளில் அகிலேஷ் யாதவ் மௌனம் காத்தார். இந்த பிரச்சினைகள் அனைத்திலும் யாதவும், மாயாவதியும் அமைதி காத்தனர். அவ்வளவுதான். பா.ஜ.க.வில் தோல்வி பயத்தால், அந்த கட்சியின் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் வேறு கட்சிகளுக்கு செல்கின்றனர். முன்பு பா.ஜ.க. தலைவர்கள் கட்சியை விட்டு வெளியேறவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.