சத்தியத்தை தொந்தரவு செய்யலாம், தோற்கடிக்க முடியாது…. பதவி பறிப்பு குறித்து சச்சின் பைலட்

சத்தியத்தை தொந்தரவு செய்யலாம், தோற்கடிக்க முடியாது…. பதவி பறிப்பு குறித்து சச்சின் பைலட்

ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. நேற்று காலை வரை அம்மாநில காங்கிரஸ் தலைவர் மற்றும் துணை முதல்வராக இருந்த சச்சின் பைலட்டை அந்த பொறுப்பில் இருந்து காங்கிரஸ் அதிரடியாக நீக்கியது. மேலும் ராஜஸ்தான் காங்கிரஸின் புதிய தலைவராக கோவிந்த் சிங் நியமனம் செய்யப்பட்டார்.

சத்தியத்தை தொந்தரவு செய்யலாம், தோற்கடிக்க முடியாது…. பதவி பறிப்பு குறித்து சச்சின் பைலட்

மாநில கட்சி தலைவர் மற்றும் துணை முதல்வர் பதவியிலிருந்து காங்கிரஸ் கட்சி தன்னை நீக்கியவுடன் சச்சின் பைலட் டிவிட்டரில் ஒரே ஒரு வரியில் காங்கிரசுக்கு பதிலடி கொடுத்துள்ளார். சச்சின் பைலட் அதில், சத்தியத்தை தொந்தரவு செய்யலாம், தோற்கடிக்க முடியாது என பதிவு செய்து இருந்தார். மேலும் சில மணி நேரங்கள் கழித்து மற்றொரு டிவிட்டில், இன்று எனக்கு ஆதரவாக வெளியே வந்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் மற்றும் மரியாதைகள் என சச்சின் பைலட் பதிவு செய்து இருந்தார்.

சத்தியத்தை தொந்தரவு செய்யலாம், தோற்கடிக்க முடியாது…. பதவி பறிப்பு குறித்து சச்சின் பைலட்

மேலும் டிவிட்டரில் தன்னை பற்றிய சுயவிவரங்களை மாற்றங்கள் செய்து அப்டேட் செய்துள்ளார். டோங்க் சட்டமன்ற உறுப்பினர், ஐ.டி, தொலைத்தொடர்பு மற்றும் நிறுவன விவகாரங்கள் துறை முன்னாள் அமைச்சர்,மற்றும் ஆணையிடப்பட்ட அதிகாரி பிராந்திய அதிகாரி என சச்சின் பைலட் டிவிட்டரில் தனது பயோவை அப்டேட் செய்துள்ளார். ராஜஸ்தான் துணை முதல்வர் மற்றும் ராஜஸ்தான் காங்கிரஸ் தலைவர் என்ற விவரங்களை நீக்கி விட்டார்.