தலைக்கு ரூ.500 -தலப்பாகட்டி பிரியாணி: கூட்டத்துக்கே இப்படின்னா ஓட்டுக்கு?

 
ர்ச்


இடைத்தேர்தலால்  ஈரோடு கிழக்கு தொகுதியில்  எல்லா டீக்கடைகளிலும் சர்வ சாதாரணமாக புழங்குகிறது  ரூ. 500,  ரூ. 2000 நோட்டுகள்.   தலைக்கு 500 ரூபா தலப்பாகட்டு பிரியாணி. கூட்டத்துக்கே இப்படி கூட்டுனா ஓட்டுக்கு? என்ன கொடுமை என்று ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் குறித்து நமது எம்ஜிஆர் நாளிதழில் கட்டுரை வெளியிட்டிருக்கிறது .

அக்கக்கட்டுரையில் மேலும்,  திருப்பூர் -ஈரோடு மாவட்டத்தின் முக்கிய தொழிலே பனியன் தொழில் தான்.  லட்சக்கணக்கான தொழிலாளர்கள் கைத்தறி தொழிலை நம்பியே வாழ்ந்து வருகின்றார்கள்.   நூல் விலை உயர்வால் அவர்கள் மிகவும் கஷ்டப்பட்டு வருகிறார்கள்.  பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்த போது விடியா ஸ்டாலின் அரசு கண்டு கொள்ளவே இல்லை . 

ட்

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் வந்துவிட்டதுமே மக்களை காத்திடும் ஆபத்பாந்தவன் போன்று நடிக்கிறார்கள்.   மக்கள் இவர்களின் கபட நாடகத்தினை  நம்ப தயாராக இல்லை என்பதால் இன்றைக்கு ஆட்சி அதிகாரம் பணத்தால் மக்களின் வாக்குகளை எப்படியாவது விலைக்கு வாங்க ஆளாய் பறக்கிறார்கள் .   

ஆட்களை கூவி கூவி அழைக்கிறது கொள்ளை அடித்து குவித்த பணத்தை வாரி இறைத்து கூலிக்கு ஆள் பிடிக்கும் வேலையாக கனஜோராக நடத்துகிறது.   தலைக்கு 500 ரூபாய் தலப்பாக்கட்டு பிரியாணியா என்ன கொடுமை?  கூட்டம் கூட்டவே இப்படி என்றால் ஓட்டுக்கு என்னவோ என்று வியந்தும் அதிர்ந்து போய் உள்ளனர் ஈரோடு கிழக்குத் தொகுதி மக்கள்.

 ஸ்டாலின் மகன் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு வந்தபோது , வேறு தொகுதிகளில் இருந்து பணத்தை வாரி இறைத்து கூட்டத்தை கூட்டினார்கள்.  இதற்கு என்ன காரணம்? தோல்வி பயம் தானா?  இப்போது தேர்தல் ஜுரம் திமுக கூட்டணிக்கு தொற்றிக் கொண்டு விட்டது.  

ud

 ஏமாற்றி ஓட்டு வாங்க நரி தந்திரங்களை கையாள்கிறது.  சொன்னதைத்தான் செய்வான் என்று பீலா விட்டு பதவிக்கு வந்த விளம்பரம் தேடி இன்று மக்கள் கடும் எதிர்ப்புகளை ஆங்காங்கே தெரிவித்து வருவதால் விழி பிதுங்கும் ஸ்டாலின் கூட்டணி பணம் என்ற பேராயுதத்தை பேர ஆயுதமாக கையில் எடுத்திருக்கிறது.  எத்தனை கோடி செலவானாலும் கவலை இல்லை என்ற உத்தரவால் ஈரோடு கிழக்கில் எல்லா டீக்கடைகளிலும் சர்வ சாதாரணமாக புழங்குகிறது 500 ரூபாய் 2000 ரூபாய் நோட்டுகள்.   களத்திலே திட்டங்களை சாதனைகளை சொல்லி வாக்கு கேட்க திராணியற்றவர்கள் கொள்ளையடித்த பணத்தை இறைத்து மக்களை விலைக்கு வாங்க துடிப்பது வெட்கக்கேடு.  எதிரிகளை நேரடியாக வீழ்த்த முடியாமல் விலைக்கு வாங்க துடிப்பது கொடுமையிலும் கொடுமை. திமுகவுக்கு தேர்தல் ஜுரம் வந்துவிட்டது என்பதைத்தான் இவைகள் உணர்த்துகிறது.