ஜிதேந்திர அவாத் நாக்கை அறுப்பவர்களுக்கு ரூ.10 லட்சம் வெகுமதி- பாஜக நிர்வாகியின் சர்ச்சை

 
j

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜிதேந்திர அவாத் நாக்கை இருப்பவர்களுக்கு 10 லட்சம் ரூபாய் வெகுமதி வழங்கப்படும் என்று பாஜக மாவட்ட தலைவர் கபில் தகேகர் அறிவித்துள்ளது சர்ச்சையாகி இருக்கிறது.  ஆனால் இந்த வன்முறை பேச்சை தங்கள் கட்சி ஆதரிக்காது என்று பாஜக விளக்கம் அளித்து இருக்கிறது.

 மகாராஷ்டிரா மாநிலத்தில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜிதேந்திர அவாத்,  அண்மையில் முகலாய வரலாற்றை அழிக்கும் முயற்சி குறித்து கருத்து தெரிவித்திருந்தார்.   ஔரங்கசீப் மற்றும் அப்சல் கான் போன்ற எதிரிகளை சந்தித்ததால் தான் சத்ரபதி சிவாஜியின் மகத்துவம் வெளிச்சத்திற்கு வந்தது.   முகலாய வரலாற்றை அழிப்பது மராட்டிய மாமன்னர் சிவாஜியின் சாதனைகளை மதிப்பிழக்கச் செய்யும் என்று கருத்து தெரிவித்திருந்தார்.

ji

 ஜிதேந்திர அவாத்தின் இந்த பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியது.  இதற்கு பாஜகவினர் கடும் கண்டனங்கள் தெரிவித்து வந்தனர்.  போராட்டங்களிலும் ஆர்ப்பாட்டங்களிலும் ஈடுபட்டு வந்தனர்.   

இந்த நிலையில் ஹிதேந்திர அவாத்துக்கு எதிரான போராட்டத்தின் போது பாஜக மாவட்ட தலைவர் கபில் தகேகர்,   சத்திரபதி சிவாஜி பற்றி அவதூறாக பேசியிருக்கும் ஜிதேந்திரா அவாத்தின் நாக்கை அறுப்பவர்களுக்கு 10 லட்சம் ரூபாய் வெகுமதி வழங்கப்படும் என்று அறிவித்தார்.  இது பெரும் சர்ச்சையையும் சலசலப்பையும் ஏற்படுத்தி இருந்தது .  இந்த விவகாரம் பெரிதாக இருக்கும் நிலையில் மாநில பாஜக கட்சி தலைமை,   கபில்தகேகரின் பேச்சுக்கள் கட்சிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று விளக்கமளித்திருக்கிறது .  மேலு, ம் இது போன்ற வன்முறை பேச்சுக்களை தங்கள் கட்சி ஒருபோதும் ஆதரிக்காது என்றும் பாஜக செய்தி தொடர்பாளர் விளக்கம் அளித்திருக்கிறார்.