பொ.செ. பதவிக்கு போட்டியிடத் தயார்: ஓபிஎஸ் அதிரடி

 
o

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலில் போட்டியிடுவதற்கான நிபந்தனைகளை நீக்கினால் பொதுச் செயலாளர் பதவிக்கு போட்டியிட தயார் என்றும், வழக்கை வாபஸ் பெறவும் தயார் என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்து இருக்கிறது ஓபிஎஸ் தரப்பு.

அதிமுகவில் இடைக்கால பொதுச் செயலாளராக இருக்கும் எடப்பாடி பழனிச்சாமி கட்சியின் நிரந்தர பொதுச் செயலாளர் ஆவதற்கான தேர்தல் நடைபெறுகிறது.  இந்த பொதுச் செயலாளர் தேர்தல் அறிவிப்பை எதிர்த்து ஓபிஎஸ்சும் அவரது ஆதரவாளர்கள் மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம், ஜேசிடி பிரபாகர் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளனர்.  நீதிபதி குமரேஷ்பாபு முன்பு இந்த வழக்கின் மனு மீது இன்று விசாரணை நடந்தது.

ஒப்

 ஓபிஎஸ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதி ஆகிவிட்டதாக எந்த நீதிமன்றமும் அறிவிக்கவில்லை.  பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்த வழக்கில் பதிலளிக்க உத்தரவிட்ட அதே நாளில் பொதுச் செயலாளர் தேர்தல் அறிவித்த காரணத்துக்காகவே தேர்தலுக்கு தடை விதிக்க வேண்டும்.  தகுதி நீக்கம் செய்துவிட்டு காலாவதி ஆகிவிட்டதாக சொல்வதை எப்படி ஏற்க முடியும் என்றார்.

 விதிகளை மீறி யாரும் போட்டியிடாதவாறு இடைக்கால பொதுச் செயலாளர் பதவியினை கொண்டு வந்திருக்கிறார்கள்.  ஒருங்கிணைப்பாளர் பதவிகளை தேர்தல் ஆணையம் அங்கீகரித்து இருக்கிறது.  கட்சியின் அடிப்படை உறுப்பினர்கள்தான் பொதுச் செயலாளர் பதவியை தேர்வு செய்ய முடியும்.  அந்த விதியை பொதுக்குழு உறுப்பினர்கள் திருத்த முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.

 நிபந்தனைகளை மீறினால் அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிட ஓபிஎஸ் தயார் என்றும்,  பொதுச் செயலாளர் பதவிக்காக இபிஎஸ்க்கு ஆதரவான விதிகள் திருத்தப்பட்டு இருக்கின்றன.  பொதுச் செயலாளர் பதவியை மீண்டும் கொண்டுவர கட்சியினர் முன்பாக எந்த கருத்துக்கணிப்பும் நடத்தவில்லை என்றும் ஓபிஎஸ் தரப்பு வழக்கறிஞர் வாதத்தை எடுத்து வைத்துள்ளார்.

 இதை அடுத்து இபிஎஸ் தரப்பு வாதம் நடந்து வருகிறது.