7 முறை தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்ட ஓபிஎஸ் எப்படி தலைவனாக உருவாக முடியும்?- ஆர்பி உதயகுமார்
7 முறை தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்ட ஓபிஎஸ் எப்படி தலைவனாக உருவாக முடியும் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குற்றஞ்சாட்டியுள்ளார்.
மதுரையில் ஒ.பி.எஸ்.க்கு எதிராக வீடியோ வெளியீட்டு பேசிய ஆர்.பி.உதயகுமார், “உங்கள் பதவிக்கு ஆபத்து என்றவுடன் உங்களுக்கு ஞானோதயம் தோன்றுகிறது, உங்கள் பதவிக்கு ஆபத்து என்றால் கட்சிக்கு ஆபத்து என்று கூறுவீர்கள். உங்கள் பதவிக்கு ஆபத்து என்றால் கட்சி தொண்டர்களுக்கு எதிர்காலம் இல்லை என்று கூறுவீர்கள்.இது எப்படி நியாயம்? உங்கள் பதவிக்கு ஆபத்து என்றால் இந்த கட்சிக்கு ஆபத்து என்று மாயத் தோற்றத்தை உங்கள் எடுபுடிகளை வைத்து உருவாக்கி விடுவீர்கள், இப்போது எடுத்திருக்க நிலைப்பாடு உறுதியான நிலைப்பாடா?
இதுவரை நீங்கள் ஏழு முறை நிலைப்பாட்டை மாற்றி உள்ளீர்கள், எடப்பாடியார் அப்படி அல்ல. ஏகமனதாக சீர்திருத்த நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு கொடுப்பதில் உங்களுக்கு என்ன மன வருத்தம், கட்சியின் கட்சியின் முன்னேற்றத்திற்கு ஒத்துழைப்பு கொடுப்பதற்கு என்ன மன வருத்தம், ஏழு முறை நிலைப்பாடு மாற்றி நீங்கள் இன்னும் எத்தனை முறை நிலைப்பாட்டில் மாற்றுவீர்கள் யாருக்கும் தெரியாது, ஆகவே தொண்டர்கள் சொல்கிறார்கள் பன்னீர்செல்வத்தை நம்பி நாங்கள் செல்ல முடியாது என...
ஓபிஎஸ் அடிமைகள் அநாகரீகததின் உச்சமாக பேசுகிறார்கள், அது உங்களுக்கு திரும்பும் என்பதை நான் கூறுகிறேன்.பெரியகுளத்தில் உட்கார்ந்து கொண்டு தொண்டர்கள் ஆதரவு கொடுப்பது போல் மாய தோற்றத்தை உருவாக்குவது என்பது ஆண்டிகள் மடம் கட்டுவது போல் உள்ளது. இது செங்கோட்டையாக இருக்காது. தன் நிலையை மாற்றிக் கொள்பவர் நிலையான தலைவராக உருவாக முடியாது, அம்மாவின் மறைவுக்கு பின்பு ஏழு முறை தனது நிலையை மாற்றிய ஓபிஎஸ் எப்படி தலைவனாக உருவாக்க முடியும்? என தொண்டர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். கட்சியில் பிளவு இல்லை. நீங்கள் ஒத்துழைமை இயக்கத் தலைவராக உள்ளீர்கள், ஒத்துழைப்பு தரமாட்டேன் என்று உடன்பட்டு பணியாற்ற மாட்டேன், உழைக்க மாட்டேன், வேடிக்கை பார்ப்பேன், விமர்சனம் செய்வேன் என்று ஒத்துழையாமை தலைவராக உள்ளதால் உங்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது” என தெரிவித்துள்ளார்.