தீர்ப்பின் மூலம் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆன்மா எடப்பாடியிடம் தான் உள்ளது தெரியவந்துள்ளது- ஆர்பி உதயகுமார்

 
rb udhyakumar

சென்னை உயர்நீதிமன்றம் அதிமுகவின் பொதுக்குழு செல்லும் என தீர்ப்பு வழங்கியதை தொடர்ந்து மதுரையில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

AIADMK appoints RB Udayakumar as deputy Oppn leader

அப்போது பேசிய அவர், “அதிமுக என்ற மாபெரும் இயக்கத்தை எம்ஜிஆர் தொடங்கி தொடர்ந்து வெற்றி சிம்மாசனத்தில் அமர்த்தினார்.தாய்தமிழ் நாட்டு மக்கள் பாதுகாவலரான எடப்பாடிக்கு நீதியரசர்கள் தந்த மகத்தான தீர்ப்பு.எம்ஜிஆர் ஜெயலலிதா ஆன்மா எடப்பாடியிடம் உள்ளது என்பதை காட்டும் வகையில் நீதிபதிகள் கொடுத்தது தான் இந்த தீர்ப்பு. இந்த தீர்ப்பு உள்ளங்கை நெல்லிக்கனி போல தெரிகிறது. கிளைக்கழகம் தொடங்கி தலைமை கழகம் வரை எடப்பாடிக்கு ஆதரவு உள்ளது. எடப்பாடியின் நல்ல நோக்கத்திற்காக கிடைத்த தீர்ப்பு.இந்த தீர்ப்பு எம்ஜிஆர், ஜெயலலிதா ஆன்மா எடப்பாடியிடம் உள்ளது என்பதை காட்டுகிறது. மக்களுக்காக, தொண்டர்களுக்காக உழைக்கிற எடப்பாடியாருக்கு கிடைத்த வெற்றி. அவரின் மக்கள் பணிக்கு கிடைத்த வெற்றி.

வருகிற எந்த தேர்தலாக இருந்தாலும் அதிமுக  வெற்றியடையும் என மக்கள் தீர்ப்பாக இந்த தீர்ப்பு அமைந்துள்ளது. நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பு உள்ளங்கை நெல்லிக்கனி தீர்ப்பு. பொதுக்குழு, சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட நிர்வாகிகள் என 99 சதவீதம் பேர் எடப்பாடி கரத்தை வலுப்படுத்தும் வகையில் உள்ளது. எடப்பாடியின் முயற்சிக்கு ஆதரவு கொடுக்கும் வயையில் இந்த தீர்ப்பு உள்ளது. எடப்பாடியார் செல்லும் இடங்களில் எல்லாம் மிகப்பெரிய வரவேற்பு உள்ளது.ஒரு இயக்கம் ஒரு தலைவருக்கு தன்னிச்சையாக தருகிற ஆதரவு போல எடப்பாடிக்கு தான் உண்டு. கைப்புண்ணுக்கு கண்ணாடி தேவை இல்லை. இந்த தீர்ப்பு மூலம் வெட்ட வெளிச்சாக தெரிகிறது. அறிந்தும் அறியாதது போல, தெரிந்தும் தெரியதது போல உள்ளவர்களை ஒன்றும் செய்ய முடியது.
அதிமுக எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் மக்கள் பணியாற்ற தயாராக உள்ளது” எனக் கூறினார்.