ஓபிஎஸ் வெளியில் தலைக்காட்ட முடியாது! ஆர்பி உதயகுமார் எச்சரிக்கை

 
rb udhyakumar

லஞ்ச ஒழிப்பு போலீசார் ஒரே நேரத்தில் தன்னுடைய வீட்டிலும் ஓபிஎஸ் விட்டிலும்  சோதனை நடத்தட்டும் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்ப்பதாக தெரிந்தால் அரசியலை விட்டு விலக நான் தயார் ஓபிஎஸ் தயாரா என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் சவால் விடுத்துள்ளார். 

துணை முதல்வர் ஓபிஎஸ்சுடன் ஆர்.பி உதயகுமார் சந்திப்பு - அதிமுகவில்  அடுத்தகட்ட பரபரப்பு | r.b.udhayakumar meet deputy chief minister  panneerselvam | Puthiyathalaimurai - Tamil News ...


மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய ஆர்பி உதயகுமார், “அதிமுகவின் வரலாறு தெரியாத செல்வராஜ் போன்ற வடிகட்டிய முட்டாளை வைத்துக்கொண்டு தலைமை தாங்கும் ஒ.பன்னீர்செல்வத்தின் நிலையை பார்த்தால் பரிதாபமாக உள்ளது. அதிமுக துவங்கிய காலம் தொட்டு கட்சியின் கொள்கைக்காக  உழைத்த குடும்பம் தங்களது குடும்பம் என்ற வரலாறு கைக்கூலியாக உள்ள கோவை செல்வராஜ் போன்றவர்களுக்கு தெரியாது. ஓபிஎஸ் உதயாகுமாரை சீண்டி பார்க்க வேண்டாம், பயமுறுத்த வேண்டாம் சொத்து சேர்த்துள்ளதாக மிரட்டி பார்க்க வேண்டாம், திறந்த கதவோடு எத்தனை சோதனைக்கும் தயாராக உள்ளேன்

ஓபிஎஸ் வீட்டிலும் தனது வீட்டிலும் சொத்து குவிப்பு குறித்து லஞ்ச ஒழிப்பு துறை  ஒரே நேரத்தில் சோதனை நடத்தி தனது வீட்டில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக கண்டறியப்பட்டால் தான் பொது வாழ்க்கையிலிருந்து விலகிவிடுறேன். நீங்கள் சொத்து குவித்ததாக அறிந்தால் பொது வாழ்க்கையில் இருந்து  விலக தயாரா? பூச்சாண்டி காட்டும் வேலை என்னிடத்தில் ஆகாது 
ஓபிஎஸ் அவர்களே இந்த நிமிடம் வரை உங்களை அண்ணனாக மதித்து கருத்துக்களை தெரிவித்து வருகிறேன். என்னை மிரட்டி பார்க்கும் ஓபிஎஸ் குறித்த பல உண்மைகளை வெளியிட்டால் ஓபிஎஸ் வெளியே  தலை காட்ட முடியாத நிலை ஏற்படும்” என எச்சரித்துள்ளார்.